ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls – Lyrics

ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே (2)
உன்னதத்திலிருந்து உன் மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்து போன உன்னை இயேசு உயிர்பெற செய்திடுவார் (2)

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது (2)

முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார் (2)
தரிசாய் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன்கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் (2) – உங்கள் துக்கம்

வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது (2)
சொப்பனாத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடைவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் (2) – உங்கள் துக்கம்

பெருமழையே வாருமே வாருமே

பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் (2)
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார் (2)
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

error: Content is protected !!
ADS
ADS
ADS