உன்னத தேவன் – Unnatha Devan – Lyrics

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய்

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய்

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

……………………………………………………………………….

Leave a Reply