உன்னை ஆசீர்வதித்திடுவேன் (Unnai Aseervathithiduven

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னோடு நான் தங்கியிருப்பேன்
உன்னை வழி நடத்திடுவேன்

உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடிருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன்

கலங்காதே என் மகனே
நீ கலங்காதே என் மகளே

பாவம் சாபம் நீக்கிடுவேன்
பரலோக இன்பம் தந்திடுவேன்
நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்
நோயற்ற வாழ்வை தந்திடுவேன்

கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்
காரியம் வாய்த்திட செய்திடுவேன்
குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்
வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்

error: Content is protected !!
ADS
ADS
ADS