உம் சித்தம் செய்வதில் தான் – Um Sitham seivathill – Lyrics

உம் சித்தம் செய்வதில் தான்
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம் இதயத்திலே
தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்

அல்லேலூயா மகிமை உமக்குத்தான்
அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான்

காத்திருந்தேன் பொறுமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி
மலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா

துதிக்கும் புதியபாடல் – என்
நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
நம்புவார்கள் உம்மையே

எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ண இயலாதையா
விவரிக்க முடியாதையா

மாபெரும் சபை நடுவில்
உம் புகழை நான் அறிவிப்பேன்
மௌனமாய் இருக்கமாட்டேன்
மனக்கண்கள் திறந்தீரே
…………………………………………………………….

Leave a Reply

Close Menu
error: Content is protected !!