ஓ! இயேசு உமதன்பு – Oh! Yesu umathanbu – Lyrics

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)

1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)

2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் (2)

3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)

4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2)

5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம்

இயேசு அல்லேலூயா ஆமென் (2)

…………………………………………………………………………………

Oh! Yesu umathanbu
Ethanai periyathu
Aagayam boomi malai
Aazhigalukkelaam periyathu — (2)

1. Sangada samayangalil
Mangiye vaadukiren
Thungane irangumena
Yengiye naadugiren
Pangamilaamal padhilalipen
Enradhal paaduguren — (2) — Oh! Yesu

2. Irulaam pallathaakil
Marukiye nadandhaalum
Arumendhan meipparaai
Aaruginil iruppadthaalum
Karunaiyaai ennai karam pidithe
Karthare kaapathallum — (2) — Oh! Yesu

3. Devanudaiya veetil
Sithapaadi thuthipen
Yega idhayathudaney
Endrum athai mathipaen
Aarathikka arugaraam Yesu
Alleluyah Amen — (2) — Oh! Yesu

Leave a Reply