கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் – Lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் — கர்த்தரை

2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்
உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்

நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே

இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்.
………………………………………………………………

Leave a Reply