காணாத ஆட்டின் பின்னே – Kanatha aatin pinae – Lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி வா நீ

முள்ளும் பதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தே தேடுகிறார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகின்றாய்

சுத்த இதயம் வேண்டா மென்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லவோ
ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ

என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னைத் தாங்கி பயம் நீக்குவார்

துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய்

எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா
…………………………………………………………………

Leave a Reply

Close Menu
error: Content is protected !!