To Advertise Contact - christmusicindia@gmail.com

ஜீவியமே ஒரே ஜீவியமே – jeeviyamae orae jeeviyamae – Lyrics

Loading

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் — ஜீவியமே

2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர்
அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் — ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை — ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் — ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் — ஜீவியமே
……………………………………………………………………………….
jeeviyamae orae jeeviyamae
annda saraasaram anaiththilumae
maevi vasikkum manithar anaiththum
poomiyil vaalvathu orae tharamae – jeeviyamae

1. pirappathum irappathum theyvach seyal
itaiyil iruppathu vaalkkaiyaakum
Yesuvil saarvathaal parisuththam kaanum
parisuththar aatchiyil saatchi koorum
ithai vitil mutivathu veelchchiyaakum — jeeviyamae

2. niththam namaivittuch selvaar paareer
avar yaarum sellum avvidamum paareer
alaralum, pulampalum udalthanaik geeralum
narakaththin thinasarik kaatchi kaeleer
irakkaththin vali kaannaar kathiyum kaannpeer — jeeviyamae

3. thirappin mukam nirka aatkal thaevai
thiyaakaththin paathaikkuch selvor thaevai
‘enjanam aliyuthae’ ena aengum aanndavar
thukkaththaith thannikkum seeshar thaevai
mun varuvor yaarkkum ithuvae vaelai — jeeviyamae

4. ennnnippaar kalinthittak kaalamathai
kathaiyaip pol manitharin naatkal sellum
ulakaththuch sevai saakaiyil oyum
unnudan mariththa pin varuvathaethu?
kiristhuvin sevai nilaiththu nirkum — jeeviyamae

5. arppanam thanthaiyae kai aliththaen
kalvi, selvam, sukam porul anaiththum
selluvaen, solluvaen Yesuvai vali ena
vaalkkaiyil thammaiyae keாnndu vaalvaen
entumae angae naan ummil vaalvaen — jeeviyamae

error: Content is protected !!
ADS
ADS
ADS