தேவ சாயல் ஆக மாறி – deva saayal aaga maari – Saarah navaroji – Lyrics

Loading

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்

4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்

7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்
………………………………………………………………………..
deva saayal aaga maari
devanodierupaen naanum

antha naalum nerungiduthae
athi viraivaay niraivaeruthae
mannin saayalai naan kalainthae than
vinnnavar saayal adaivaen

boomiyin koodaaram endrum
belavinamae alinthidumae
kaivaelai yallaatha pon veedu
kanndatainthu vaalnthiduvaen

sorum ullaana manithan
sothanaiyil pelamataiya
aattith thaettidum thaettaravaalan
aanndavar ennotiruppaar

aaviyin achchaாrameenthaar
aayaththamaay sernthidavae
jeevanae enathu kiristhaesu
saavu enthan aathaayamae

kaaththirunthu jepippathinaal
kalukupola paranthelumpi
jeevayaaththirai oti mutiththu
jeeva kireedam pettiduvaen

moontil ontay jolippavarai
mukamukamaay tharisiththida
vaanjaiyaayth thavikkum enathullam
vaarum entu kooppiduthae

unnatha seeyon malaimael
enatharumai Yesuvudan
jepa veettinilae makilnthae naan
jeeveeppaenae needuliyaay

error: Content is protected !!
ADS
ADS
ADS