பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி
ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே – பரலோகமே
திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே
தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே
நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே
சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே
வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே
பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே
நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே
…………………………………………………………………………………………