மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை – Magimaiyai vetri sirantha kartharai – Lyrics

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)

1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்

2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே

3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்

4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை

துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்

Leave a Reply