மகிழ்ந்து களிகூறு மகனே(மகளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன்(நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
தேவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு
அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு ஷிணீயீமீ நிuணீக்ஷீபீ
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
மீனின் வயிற்றில் யோனா போல்
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்