வழி நடத்தும் வல்ல தேவன் – vali nadaththum valla devan – tamil christian songs

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே

பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே
செல்வோம் – பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே

போகும் வழியைக் காட்டி நல்ல
போதனை செய்வார் – ஏகும் சுத்தர்
மீது கண்கள் இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்

அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே – சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே

வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்

காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே

அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே – என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே
…………………………………………………………..
vali nadaththum valla thaevan
vaalvil naayakanae vaalvil naayakanae
nam thaalvil naayakanae

parathaesap pirayaannikalae naam
vaalum paarinilae – paramaananthaththotae
selvom – paraman naattirkae
Yesu paran tham veettinirkae

pokum valiyaik kaatti nalla
pothanai seyvaar – aekum suththar
meethu kannkal iruththi nadaththuvaar
Yesu thiruththi nadaththuvaar

anthakaara sakthikal emmai
anukidaamalae – sonthamaana
tham janaththai soolnthu kaappaarae
Yesu thunnaiyaay nirpaarae

vaathai Nnoykal vanthunpangal
varuththiya pothum – paathaiyil
naam sornthidaamal palappaduththiduvaar
Yesu thidappaduththiduvaar

kaadaanaalum maedaanaalum kadanthu
sentiduvom – paadaanaalum
paatich selvom paravasamudanae
Yesu paran thaan nammudanae

antantulla thaevai thanthu
aatharippaarae – ententum
thuthikanamum makimaiyavarkkae
Yesu makipanaamavarkkae

Leave a Reply