ஒரு வரியில் 1500 ஸ்தோத்திரபலிகள் by C. பூமணி

Loading

Eva. C. பூமணி – 8754504432

1. ஆதி. 1:1 – வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
2. ஆதி. 1:2 – ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
3. ஆதி. 1:5 – வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்ட தேவனே
4. ஆதி. 1:8 – ஆகாய விரிவுக்கு வானம் என்று பேரிட்ட தேவனே
5. ஆதி. 1:10 – ஜலத்திற்குச் சமுத்திரம் என்று பேரிட்ட தேவனே
6. ஆதி. 1:14 – ஆகாயவிரிவிலே சுடர்களை உண்டாக்கியவரே
7. ஆதி. 1:16 – மகத்துவமான நட்சத்திரங்களையும் உண்டாக்கியவரே
8. ஆதி. 1:21 – சிறகுள்ள சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தவரே
9. ஆதி. 2:7 – மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கியவரே
10. ஆதி. 2:7 – ஜீவ சுவாசத்தை மனுஷன் நாசியிலே ஊதினவரே
11. ஆதி. 2:8 – கிழக்கே ஏதேன் தோட்டத்தை உண்டாக்கியவரே
12. ஆதி. 2:10 – ஒரு நதி ஓடி, நாலு பெரிய ஆறுகளாக மாற்றியவரே
13. ஆதி. 2:22 – மனுஷனின் விலாஎலும்பை மனுஷியாக உருவாக்கியவரே
14. ஆதி. 4:7 – நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ என்றவரே
15. ஆதி. 5:1 – மனுஷனை தேவ சாயலாக உண்டாக்கியவரே
16. ஆதி. 5:24 – ஏனோக்குடன் சஞ்சரித்த தேவனே
17. ஆதி. 6:8 – நோவாவுக்கு கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்ததே
18. ஆதி. 9:13 – வில்லை மேகத்தில் வைத்து உடன்படிக்கை செய்தவரே
19. ஆதி. 15:1 -ஆபிரகாமுக்கு மகா பெரிய பெலனுமாயிருக்கிற கர்;த்தாவே
20. ஆதி. 17:1 – சர்வ வல்லமையுள்ள பிதாவே
21. ஆதி. 18:14 – கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ என்றவரே
22. ஆதி. 18:25 – சர்வலோக நியாயாதிபதியே, நீதி செய்கிறவரே
23. ஆதி. 19:24 – வானத்திலிருந்து கந்தகத்தை, அக்கினியை வருஷித்தவரே
24. ஆதி. 21:17 – ஆகாரின் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டவரே
25. ஆதி. 26:12 – வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடையச் செய்கிறவரே
26. ஆதி. 27:28 – மிகுந்த தானியத்தையும் திராட்ச ரசத்தையும் தருகிறவரே
27. ஆதி. 35:11 – யாக்கோபின் சந்ததியில் ராஜாக்களை பிறப்பித்தவரே
28. ஆதி. 41:38 – யோசேப்புக்கு தேவ ஆவியைக் கொடுத்தவரே
29. ஆதி. 45:7 – பெரிய இரட்சிப்பினால் உயிரோடே காப்பாற்றுகிறவரே
30. ஆதி. 49:22 – யோசேப்பு ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி என்றவரே
31. ஆதி. 49:25 – வானத்தின் ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கிறவரே
32. ஆதி. 50:20 – தீமையை நன்மையாக முடியப் பண்ணுகிறவரே
33. யாத். 2:23 -அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தத்தைக் கேட்கிறவரே
34. யாத். 2:25 – இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கி பார்த்தவரே
35. யாத். 3:2 – மோசேக்கு அக்கினி ஜுவாலையிலே தரிசனமானவரே
36. யாத். 3:4 – முட்செடியின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவரே
37. யாத். 3:7 – இஸ்ரவேலர் படுகிற வேதனையை அறிந்தவரே
38. யாத். 3:7 – இஸ்ரவேலர் இடுகிற கூக்குரலைக் கேட்டவரே
39. யாத். 3:14 – இருக்கிறவராக இருக்கிறேன் என்றவரே
40. யாத். 4:15 – நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்கு உணர்த்துகிறவரே
41. யாத். 4:22 – இஸ்ரவேல் என்னுடைய சேஷ்டபுத்திரன் என்றவரே
42. யாத். 6:2 – யேகோவா தேவனே
43. யாத். 7:20 – நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாற்றியவரே
44. யாத். 8:24 – மகா திரளான வண்டு ஜாதிகளைக் கொண்டு வந்தவரே
45. யாத். 9:23 – இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்புகிறவரே
46. யாத். 9:24 – கல்மழையோடே கலந்த அக்கினியையும் அனுப்புகிறவரே
47. யாத். 10:13 – கீழ்க்காற்றினால் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தவரே
48. யாத். 10:19 – மகா பலத்த மேல்காற்றை வீசச்செய்தவரே
49. யாத். 12:51 – இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணியவரே
50. யாத். 13:21 – ஜனங்களை பகலில் மேக ஸ்தம்பத்தினால் நடத்தியவரே
51. யாத். 13:21 – ஜனங்களை இரவில் அக்கினி ஸ்தம்பத்தினால் நடத்தியவரே
52. யாத். 14:14 – எங்களுக்காக யுத்தம் பண்ணுகிற கர்த்தாவே
53. யாத். 14:24 – எகிப்தியரின் சேனையைக் கலங்கடித்த வல்லவரே
54. யாத். 15:2 – என் பெலனும் கீதமும் இரட்சிப்புமான கர்த்தாவே
55. யாத். 15:3 – யுத்தத்தில் வல்லவரான கர்த்தாவே
56. யாத். 15:6 – உம் வலக்கரத்தினால் பகைஞனை நொறுக்கியவரே
57. யாத். 15:25 – மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றியவரே
58. யாத். 15:26 – நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றவரே
59. யாத். 15:27 – பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரமும் தந்தவரே
60. யாத். 17:15 – யேகோவா நிசியே, எந்நாளும் வெற்றி கொடுப்பவரே
61. யாத். 18:11 – எல்லா தேவர்களைப் பார்;க்கிலும் பெரியவரே
62. யாத். 19:9 – கார்மேகத்தில் வருகிறவரே
63. யாத். 19:18 – சீனாய் மலையின் மேல் அக்கினியில் இறங்கியவரே
64. யாத். 19:18 – சீனாய் மலை முழுவதும் மிகவும் அதிரச் செய்தவரே
65. யாத். 20:6 – ஆயிரம் தலைமுறைக்கு இரக்கஞ் செய்கிறவரே
66. யாத். 20:18 – இடி முழக்கங்களையும் மின்னல்களையும் உடையவரே
67. யாத். 20:22 – வானத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரோடே பேசியவரே
68. யாத். 23:20 – ஒரு தூதனை எனக்கு முன்னே அனுப்புகிறவரே
69. யாத். 23:22 – என் சத்துருக்களுக்குச் சத்துருவாக இருப்பவரே
70. யாத். 23:22 – என் விரோதிகளுக்கு விரோதியாக இருப்பவரே
71. யாத். 23:25 – என் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறவரே
72. யாத். 23:25 – என் வியாதியை என்னிலிருந்து விலக்குகிறவரே
73. யாத். 24:16 – மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவரே
74. யாத். 28:3 – யாவரையும் ஞானத்தின் ஆவியால் நிரப்புகிற பிதாவே
75. யாத். 31:1,5 – பெசலெயேலை தேவ ஆவியினால் நிரப்பியவரே
76. யாத். 33:11 – மோசேயோடே முகமுகமாய்ப் பேசிய கர்த்தாவே
77. யாத். 33:14 – என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்றவரே
78. யாத். 33:17 – எனக்கு உமது கண்களில் கிருபை கிடைத்ததற்காக
79. யாத். 33:17 – என்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்தவரே
80. யாத். 34:6 – இரக்கமும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுமானவரே
81. யாத். 34:10 – பூமியெங்கும் பயங்கரமான காரியங்களைச் செய்கிறவரே
82. யாத். 40:34 – தமது மகிமையால் வாசஸ்தலத்தை நிரப்பிய கர்த்தாவே
83. லேவி. 17:11 – மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்றவரே
84. லேவி. 17:14 – சகல மாம்சத்துக்கும் இரத்தத்தை உயிராக வைத்தவரே
85. லேவி. 20:24 – பாலும் தேனும் ஓடுகிற தேசத்தைக் கொடுக்கிறவரே
86. லேவி. 20:26 – எங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தவரே
87. லேவி. 21:8 – எங்களை பரிசுத்தமாக்குகின்ற கர்த்தாவே
88. லேவி. 21:12 – தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் தந்தவரே
89. லேவி. 22:29 -மனப்பூர்வமாய் ஸ்தோத்திரபலியை செலுத்துங்கள் என்றவரே
90. லேவி. 22:32 – இஸ்ரவேலர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுகிறவரே
91. லேவி. 25:18 – தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள் என்றவரே
92. லேவி. 26:4 – ஏற்ற காலத்தில் மழை பெய்யப் பண்ணுகிற வல்லவரே
93. லேவி. 26:9 – எங்கள் மேல் கண்ணோக்கமாய் இருக்கிற பிதாவே
94. லேவி. 26:11 – எங்கள் நடுவில் உமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்தவரே
95. லேவி. 26:12 – எங்கள் நடுவிலே உலாவி எங்கள் தேவனாயிருக்கிறவரே
96. லேவி. 26:13 – எங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணினவரே
97. எண். 6:24 – என்னை ஆசீர்வதித்து என்னைக் காக்கிற கர்த்தாவே
98. எண். 6:25 – உம்முடைய முகத்தை என்மேல் பிரகாசிக்க செய்கிறவரே
99. எண். 11:25 – மேகத்திலிருந்து இறங்கிய கர்த்தாவே
100. எண். 11:31 – காற்றினால் காடைகளை அடித்துக் கொண்டு வந்தவரே
101. எண். 14:17 – எனது அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரே
102. எண். 14:21 – தன்னுடைய மகிமையால் பூமியெல்லாம் நிறைத்தவரே
103. எண். 22:28 – கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்த தேவனே
104. எண். 23:22 – காண்டாமிருகத்துக்கொத்த பெலன் கொடுக்கிறவரே
105. எண். 24:17 – ஒரு நட்சத்திரமாய் யாக்கோபிலிருந்து உதித்தவரே
106. எண். 24:17 – ஒரு செங்கோலாய் இஸ்ரவேலிலிருந்து எழும்பியவரே
107. உபா. 3:22 – இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணிய கர்த்தாவே
108. உபா. 4:7 – தொழுது கொள்ளுகிற எங்களுக்கு சமீபமாயிருக்கிறவரே
109. உபா. 4:36 -வானத்திலிருந்து தமது சத்தத்தை கேட்கப் பண்ணுகிறவரே
110. உபா. 4:39 – உயர வானத்துக்கும், தாழ பூமிக்கும் கர்த்தாவே
111. உபா. 5:26 – அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனே
112. உபா. 7:6 – எங்களை சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டவரே
113. உபா. 7:14 – சகல ஜனங்களைப் பார்க்கிலும் என்னை ஆசீர்வதிக்கிறவரே
114. உபா. 7:15 – சகல நோய்களையும் என்னைவிட்டு விலக்குகிறவரே
115. உபா. 8:3 – வார்த்தை என்ற மன்னாவினால் போஷிப்பவரே
116. உபா. 8:15 – பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் தந்தவரே
117. உபா. 8:18 – ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிற பெலனை தருகிறவரே
118. உபா. 11:14 – முன்மாரியையும், பின்மாரியையும் பெய்யப் பண்ணுகிறவரே
119. உபா. 23:5 – சாபத்தை எனக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறவரே
120. உபா. 23:14 – என் பாளையத்திற்குள்ளே உலாவுகிற கர்த்தாவே
121. உபா. 23:20 – நான் கையிடும் வேலையிலெல்லாம் ஆசீர்வதிப்பவரே
122. உபா. 28:1 – சகல ஜாதிகளிலும் என்னை மேன்மையாக வைத்தவரே
123. உபா. 28:11 – எனக்குப் பரிபூரண நன்மையை கட்டளையிட்டவரே
124. உபா. 28:12-எனக்கு பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பவரே
125. உபா. 30:20 – எனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமான கர்த்தாவே
126. உபா. 31:8 – எனக்கு முன்பாகப் போகிற கர்த்தாவே
127. உபா. 31:15 – கூடாரத்திலே மேகஸ்தம்பத்திலே தரிசனமானவரே
128. உபா. 32:2 – இளம்பயிரின் மேல் மழையைப் பொழிகிறவரே
129. உபா. 32:13 – கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயை தந்தவரே
130. உபா. 32:18 – என்னை ஜெநிப்பித்த கன்மலையானவரே
131. உபா. 32:40 – என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரே
132. உபா. 33:2 – அக்கினிமயமான பிரமாணம் வலக்கரத்தால் தந்தவரே
133. உபா. 33:3 – ஜனங்களை மெய்யாகவே சிநேகிக்கும் நேசரே
134. உபா. 34:9 – என்னை ஞான ஆவியினால் நிறைத்த ஞானதேவனே
135. யோசு. 1:5 – நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை என்றவரே
136. யோசு. 1:5 – நான் உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரே
137. யோசு. 1:6 – பலங்கொண்டு திடமனதாயிரு என்ற நல்லவரே
138. யோசு. 2:10 – சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போக செய்தவரே
139. யோசு. 3:7 – என்னை மேன்மைப் படுத்துகிற கர்த்தாவே
140. யோசு. 3:10 – ஜீவனுள்ள தேவனாக எங்கள் நடுவே இருக்கிறவரே
141. யோசு. 3:11 – சர்வ பூமிக்கும் ஆண்டவரே
142. யோசு. 3:13 – யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிறுத்தியவரே
143. யோசு. 5:14 – சேனையின் அதிபதியாய் வந்த கர்த்தாவே
144. யோசு.10:11 – வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணியவரே
145. நியா. 6:24,23 – யெகோவா ஷாலோம் உனக்கு சமாதானம் என்றவரே
146. நியா. 6:34 – கிதியோன் மேல் இறங்கிய கர்த்தரின் ஆவியானவரே
147. நியா. 7:18 – கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்றவரே
148. நியா. 15:14 – சிம்சோன் மேல் பலமாய் இறங்கிய கர்த்தரின் ஆவியானவரே
149. நியா. 15:14 – சிம்சோன் கைகளின் கட்டுகளை அறுத்துப் போட்டவரே
150. நியா. 15:19 – லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப் பண்ணியவரே
151. 1 சாமு. 2:7 – எங்களை ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவரே
152. 1 சாமு. 2:7 – எங்களை உயர்த்துகிற உயர்ந்த தேவனே
153. 1 சாமு. 2:10 – தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயர்த்தியவரே
154. 1 சாமு. 4:4 – கேரூபீன்களின் மத்தியில் வாசமாயிருக்கிறவரே
155. 1 சாமு. 7:10 – மகா பெரிய இடிமுழக்கங்களை முழங்கப் பண்ணுகிறவரே
156. 1 சாமு. 7:12 – எபெனேசர் இம்மட்டும் காத்து உதவி செய்தவரே
157. 1 சாமு. 10:9 – சவுலுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தவரே
158. 1 சாமு. 12:18 – இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுகிறவரே
159. 1 சாமு. 12:24 – மகிமையான காரியங்களைச் செய்கிற மகிமையானவரே
160. 1 சாமு. 16:7 – இருதயத்தைப் பார்க்கிற கர்த்தாவே
161. 1 சாமு. 16:12 – தாவீதை அபிஷேகம் பண்ணிய தேவனே
162. 1 சாமு. 16:13 – தாவீதின் மேல் வந்து இறங்கிய கர்த்தரின் ஆவியானவரே
163. 1 சாமு. 17:45 – இராணுவங்களின் சேனைகளுடைய கர்த்தாவே
164. 1 சாமு. 26:23 – அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்க பலனளிப்பவரே
165. 1 சாமு. 26:24 – எனது எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்குகிறவரே
166. 2 சாமு. 3:1 – தாவீதை வரவர பலப்படுத்தியவரே
167. 2 சாமு. 7:6 – கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவுகிறவரே
168. 2 சாமு. 22:3 – என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே
169. 2 சாமு. 22:11 – கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் செல்லுகிறவரே
170. 2 சாமு. 22:11 – காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானவரே
171. 2 சாமு. 22:20 – என்னை விசாலமான இடத்திலே தப்புவிக்கிறவரே
172. 2 சாமு. 22:33 – எனக்கு பலத்த அரணான தேவனாகிய கர்த்தாவே
173. 2 சாமு. 22:33 – என் வழியைச் செவ்வைப் படுத்துகிற தேவனே
174. 2 சாமு. 22:47 – ஜீவனுள்ளவரும், என் கன்மலையுமான கர்த்தாவே
175. 2 சாமு. 23:3 – நீதிபரராய் மனுஷரை ஆளுகிற தேவனே
176. 2 சாமு. 23:4 – காலையில் மந்தாரமில்லாமல் உதித்தவரே
177. 2 சாமு. 23:4 – விடியற்கால வெளிச்சத்தைப் போல இருக்கிறவரே
178. 1 இரா. 3:5 – சாலொமோனுக்கு சொப்பனத்திலே தரிசனமானவரே
179. 1 இரா. 8:11 – தம்முடைய மகிமையால் ஆலயத்தை நிரப்புகிறவரே
180. 1 இரா. 8:13 -ஆலயத்திலே என்றைக்கும் நிலையாக வாசம் பண்ணுகிறவரே
181. 1 இரா. 8:30 – விண்ணப்ப ஜெபத்தையெல்லாம் கேட்டு மன்னிப்பவரே
182. 1 இரா. 18:1 – தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுகிறவரே
183. 1 இரா. 18:24 – அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே
184. 2 இரா. 19:15 – பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் ஒரே தேவனே
185. 2 இரா. 20:1 – எசேக்கியாவின் மரண வியாதியை மாற்றிய வல்லவரே
186. 2 இரா. 20:5 – எசேக்கியாவை குணமாக்கிய கர்த்தாவே
187. 2 இரா. 20:5 – என் விண்ணப்பத்தைக் கேட்பவரே
188. 2 இரா. 20:5 – என் கண்ணீரைக் காண்பவரே
189. 1 நாளா. 16:30 – பூச்சக்கரத்தை அசையாதபடி உறுதிப்படுத்தியவரே
190. 1 நாளா. 16:33 – பூமியை நியாயந்தீர்க்க வருகிற வல்லவரே
191. 1 நாளா. 17:10 – என் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினவரே
192. 1 நாளா. 21:13 – இரக்கத்தில் மகா பெரியவரே
193. 1 நாளா. 28:9 – நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவரே
194. 1 நாளா. 29:11 – எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறவரே
195. 1 நாளா. 29:17 – உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறவரே
196. 1 நாளா. 29:25 – எனக்கு ராஜரிக மகத்துவத்தை கட்டளையிடுகிறவரே
197. 2 நாளா. 3:1 – மோரியா மலையில் ஆலயத்தைக் கட்ட கட்டளையிட்டவரே
198. 2 நாளா. 6:18 – பூமியிலே மனுஷரோடே வாசம் பண்ணுகிற தேவனே
199. 2 நாளா. 6:21 – பரலோக வாசஸ்தலத்திலே ஜெபத்தைக் கேட்கிறவரே
200. 2 நாளா. 6:27 – எனது பாவத்தை மன்னித்து நல் வழியை போதிக்கிறவரே
201. 2 நாளா. 6:31 – மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரே
202. 2 நாளா. 7:1 – அக்கினி வடிவில் வானத்திலிருந்து இறங்கியவரே
203. 2 நாளா. 16:9 – கண்களால் பூமியெங்கும் உலாவுகிறவரே
204. 2 நாளா. 20:6 – ஒருவரும் உம்மை எதிர்த்து நிற்கக் கூடாத வல்லவரே
205. நெகே. 1:5 – கிருபையை காக்கிற மகத்துவமான தேவனே
206. நெகே. 9:11 – கடலின் நடுவாகக் கால் நனையாமல் நடத்தியவரே
207. நெகே. 9:15 – பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்தவரே
208. நெகே. 9:15 – கன்மலையின் தண்ணீரை தாகத்துக்குத் தந்தவரே
209. நெகே. 9:20 -அறிவை உணர்த்த நல் ஆவியைக் கட்டளையிட்டவரே
210. யோபு 5:9 – எண்ணிமுடியாத அதிசயங்களை செய்கிறவரே
211. யோபு 7:20 – மன்னுயிரைக் காப்பவரே
212. யோபு 9:4 – இருதயத்தில் ஞானமும் பெலத்தில் பராக்கிரமமுள்ளவரே
213. யோபு 9:5 – பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறவரே
214. யோபு 9:8 – வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடந்தவரே
215. யோபு 9:9 – அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கியவரே
216. யோபு 9:11 – இதோ என் அருகில் கடந்து போகிறவரே
217. யோபு 9:19 – பெலத்திலும் நியாயத்திலும் பெலத்தவராகிய தேவனே
218. யோபு 10:12 – எனக்கு ஜீவனைத் தந்த பிதாவே
219. யோபு 11:8,7 – வானபரியந்தம் உயர்ந்த அந்தரங்க ஞானமானவரே
220. யோபு 11:8 – பாதாளத்திலும் ஆழமான ஞானக் கன்மலையே
221. யோபு 11:9 – சமுத்திரத்தைப் பார்க்கிலும் அகலமான ஞான தேவனே
222. யோபு 11:9 – பூமியைப் பார்;க்கிலும் நீளமான ஞானவானே
223. யோபு 12:10 – சகல மனுஷரின் ஆவியை கையில் வைத்திருக்கிறவரே
224. யோபு 19:25 – என் மீட்பராய் உயிரோடிருக்கிறவரே
225. யோபு 22:12 – பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிற தேவனே
226. யோபு 22:14 – பரமண்டலத்தின் சக்கரத்திலே உலாவுகிறவரே
227. யோபு 25:2 – சகலஅதிகாரம் உடைய கர்த்தாவே
228. யோபு 25:2 – உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தைத் தருகிறவரே
229. யோபு 26:7 – உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்தவரே
230. யோபு 26:7 – பூமியை அந்தரத்திலே தொங்க வைத்தவரே
231. யோபு 26:8 – தண்ணீர்களை கார் மேகங்களில் கட்டி வைக்கிறவரே
232. யோபு 26:12 – வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமர்த்துகிறவரே
233. யோபு 26:13 – தமது ஆவியினால் வானத்தை அலங்கரிக்கிறவரே
234. யோபு 26:14 – தமது வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவரே
235. யோபு 28:6 – கல்லுகளில் இந்திரநீலம் விளையும்படி செய்கிறவரே
236. யோபு.28:10 – கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறவரே
237. யோபு 28:18 – முத்துக்களைப் பார்க்கிலும், ஞானமே உயர்ந்தது என்றவரே
238. யோபு 28:24 – வானங்களின் கீழ் இருக்கிறதெல்லாம் காண்கிறவரே
239. யோபு 28:26 – இடி முழக்கத்தோடே மின்னலுக்கு வழியை ஏற்படுத்துகிறவரே
240. யோபு 33:4 – என்னை உண்டாக்கிய தேவனுடைய ஆவியானவரே
241. யோபு 33:4 – சர்வ வல்லவரின் சுவாசத்தின் மூலம் உயிர் கொடுத்தவரே
242. யோபு 36:5 – ஒருவரையும் புறக்கணியாதவரும் மன உருக்கமுமானவரே
243. யோபு 36:27 – நீர்த்துளிகளை அணுவைப்போல் ஏறப்பண்ணுகிறவரே
244. யோபு 36:27 – மேகங்களிலிருந்து மழையைச் சொரிய செய்கிறவரே
245. யோபு 36:32 – மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடியவரே
246. யோபு 37:5 – நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை செய்கிறவரே
247. யோபு 37:10 – தமது சுவாசத்தினால் குளிரைக் கொடுப்பவரே
248. யோபு 37:11 – மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறவரே
249. யோபு 37:15 – மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப் பண்ணுகிறவரே
250. யோபு 37.16 – மேகங்கள் தொங்கும்படி வைத்த பூரண ஞானமுள்ளவரே
251. யோபு 37:18 – கண்ணாடி போன்ற ஆகாயமண்டலத்தை விரித்தவரே
252. யோபு 37:21 – ஆகாய மண்டலத்திலே பொன் மயமானவரே
253. யோபு 37:23 – வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்த மகா நீதிபரரே
254. யோபு 38:1 – பெருங்காற்றிலிருந்து உத்தரவு தருகிறவரே
255. யோபு 38:4 – பூமியை அஸ்திபாரப் படுத்திய வல்லவரே
256. யோபு 38:6 – பூமியின் கோடிக் கல்லை வைத்தவரே
257. யோபு 38:13 – விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுக்கிறவரே
258. யோபு 38:16 – சமுத்திர ஆழத்தின் அடியில் உலாவுகிறவரே
259. யோபு 38:22 – கல்மழையிருக்கிற பண்டசாலையைப் படைத்தவரே
260. யோபு 38:24 – பூமியின் மேல் கீழ்க்காற்றை வீசச்செய்தவரே
261. யோபு 38:26 – பூமியெங்கும் மழையை வருஷிக்கப் பண்ணுகிறவரே
262. யோபு 38:28 – பனித்துளிகளை ஜநிப்பித்தவரே
263. யோபு 38:29 – ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் படைத்தவரே
264. யோபு 38:32 – துருவச் சக்கர நட்சத்திரத்தை வழி நடத்துகிறவரே
265. யோபு 38:38 – ஆகாயத் துருத்தியிலுள்ள தண்ணீரைப் பொழிகிறவரே
266. யோபு 40:9 – இடிமுழக்கமாய் சத்தம் இடுகிறவரே
267. யோபு 42:2 – சகலத்தையும் செய்ய வல்லவரே
268. சங். 3:3 – என் தலையை உயர்த்துகிறவரே
269. சங். 3:4 – எனக்கு பரிசுத்த பர்வதத்திலிருந்து செவி கொடுக்கிறவரே
270. சங். 3:5 – நான் படுத்து நித்திரை செய்கையில் என்னைத் தாங்குகிறவரே
271. சங். 4:1 – நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினவரே
272. சங். 4:3 – பக்தியுள்ளவனை தமக்காகத் தெரிந்து கொண்ட நல்லவரே
273. சங். 4:6 – உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கிறவரே
274. சங். 4:7 – அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தவரே
275. சங். 5:1 – என் வார்த்தையின் தியானத்தைக் கவனிக்கிறவரே
276. சங். 5:3 – காலையில் என் சத்தத்தைக் கேட்கிற கர்த்தாவே
277. சங். 5:12 – நீதிமானை காருணிய கேடகத்தினால் சூழ்ந்தவரே
278. சங். 6:2 – என்மேல் இரங்கி என்னை குணமாக்குகிற கர்த்தாவே
279. சங். 6:4 – உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சிக்கிறவரே
280. சங். 6:8 – என் அழுகையின் சத்தத்தைக் கேட்கிற என் நேசரே
281. சங். 6:9 – என் விண்ணப்ப ஜெபத்தை ஏற்றுக் கொண்ட கர்த்தாவே
282. சங். 7:6 – நியாயத் தீர்ப்பை நியமித்திருக்கிற நியாயாதிபதியே
283. சங். 7:8 – என் நீதியின்படி எனக்கு நியாயஞ் செய்கிறவரே
284. சங். 7:9 – நீதிமானை ஸ்திரப்படுத்துகிற நீதியுள்ள நீதிபதியே
285. சங். 7:9 – இருதயத்தின் உள்ளிந்திரியங்களை சோதிக்கிறவரே
286. சங். 7:10 – செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிறவரே
287. சங். 7:13 – தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்குகிறவரே
288. சங். 8:1 – தமது மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தவரே
289. சங். 8:1 – பூமியெங்கும் மேன்மையுள்ள நாமமுடையவரே
290. சங். 8:3 – சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஸ்தாபித்தவரே
291. சங். 8:5 – மனுஷனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினவரே
292. சங். 8:5 – மனுஷனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டுகிறவரே
293. சங். 9:2 – உன்னதமான கர்த்தாவே
294. சங். 9:4 – நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கின்றவரே
295. சங். 9:8 – சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்கிறவரே
296. சங். 9:9 – நெருக்கப்படுகிற காலங்களில் தஞ்சமானவரே
297. சங். 9:9 – சிறுமைப்பட்டவர்களுக்கு அடைக்கலமான நல்லவரே
298. சங். 9:10 – உம்மைத் தேடுகிறவர்களை கைவிடாமல் இருக்கிறவரே
299. சங். 9:13 – மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே
300. சங். 9:18 – எளியவனை என்றைக்கும் மறக்காத மகா தேவனே
301. சங். 10:14 – திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே
302. சங். 10:17 – சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்கிறவரே
303. சங். 10:18 – ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்கிற நீதி தேவனே
304. சங். 11:4 – தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற கர்த்தாவே
305. சங். 11:4 – தமது கண்களால் மனுபுத்திரரைப் பார்க்கிறவரே
306. சங். 11:7 – நீதியின் மேல் பிரியப்படுகிற நீதியுள்ள கர்த்தாவே
307. சங். 11:7 – செம்மையானவனை நோக்கிப் பார்ப்பவரே
308. சங். 12:7 – எங்களைக் காப்பாற்றி காத்துக் கொள்கிற அற்புதரே
309. சங். 13:5 – இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரச் செய்கிறவரே
310. சங். 14:2 – பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கிப் பார்ப்பவரே
311. சங். 14:5 – நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிற தேவனே
312. சங். 14:7 – தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பை மாற்றுகிறவரே
313. சங். 16:5 – என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவரே
314. சங். 16:7 – எனக்கு உணர்த்தி ஆலோசனை தருகிற கர்த்தாவே
315. சங். 16:8 – என் வலது பாரிசத்தில் இருக்கிற கர்த்தராகிய தேவனே
316. சங். 16:11 – ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துகிறவரே
317. சங். 16:11 – நித்திய பேரின்பமும் பரிபூரண ஆனந்தமும் தந்தவரே
318. சங். 17:3 – என் இருதயத்தைப் பரிசோதித்து விசாரிக்கிறவரே
319. சங். 17:4 – துஷ்டரின் பாதைகளுக்கு என்னை விலக்குகிறவரே
320. சங். 17:5 – என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரே
321. சங். 17:7 – தமது வலது கரத்தினால் தப்புவித்து இரட்சிப்பவரே
322. சங். 17:7 – தமது அதிசயமான கிருபையை விளங்கப் பண்ணுகிறவரே
323. சங். 17:8 – கண்மணியைப் போல என்னைக் காக்கிறவரே
324. சங். 17:9 – தமது செட்டைகளின் நிழலில் என்னைக் காப்பாற்றுகிறவரே
325. சங். 17:15 – நான் விழிக்கும் போது உமது சாயலில் மாற்றுகிறவரே
326. சங். 18:2 – என் கேடகமும், என் இரட்சணியக் கொம்புமான கர்த்தாவே
327. சங். 18:6 – ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்கிறவரே
328. சங். 18:9 – வானங்களைத் தாழ்த்தி இறங்குகிறவரே
329. சங். 18:11 – கார்மேகங்களை தம்மைச் சூழக் கூடாரமாக்கினவரே
330. சங். 18:15 – தமது சுவாசக்காற்றினால் தண்ணீர் மதகுகளை திறந்தவரே
331. சங். 18:16 – உயரத்திலிருந்து உமது கையை நீட்டி என்னைப் பிடித்தவரே
332. சங். 18:16 – என்னை ஜலப்பிரவாகத்திலிருந்து தூக்கிவிட்டவரே
333. சங். 18:17 – என் பலத்த சத்துருவுக்கு என்னை விடுவித்தவரே
334. சங். 18:18 – என் ஆபத்து நாளில் எனக்கு ஆதரவாயிருந்தவரே
335. சங். 18:19 – என்மேல் பிரியமாயிருந்து என்னைத் தப்புவிக்கிறவரே
336. சங். 18:28 – என் வாழ்க்கையின் விளக்கை ஏற்றி வெளிச்சமாக்கியவரே
337. சங். 18:33 – என் கால்களை மான்களுடைய காலைப் போலாக்குகிறவரே
338. சங். 18:35 – தம்முடைய இரட்சிப்பின் கேடகத்தை எனக்குத் தந்தவரே
339. சங். 18:35 – தமது வலதுகரத்தினால் என்னைத் தாங்குகிறவரே
340. சங். 18:39 – என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப் பண்ணியவரே
341. சங். 18:46 – துதிக்குப் பாத்திரரான ஜீவனுள்ள கர்த்தாவே
342. சங். 18:46 – உயர்ந்திருக்கிற என் இரட்சிப்பின் கன்மலையே
343. சங். 18:48 – கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறவரே
344. சங். 19:4 – சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தவரே
345. சங். 19:7 – பேதையை ஞானியாக்குகிற ஞானவானே
346. சங். 19:7 – கர்த்தரின் வேதத்தால் என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறவரே
347. சங். 19:8 – தேவ நியாயங்களால் இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவரே
348. சங். 19:10 – தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமானவரே
349. சங். 19:14 – என் கன்மலையும் என் மீட்பருமாகிய ஆண்டவரே
350. சங். 20:2 – எனக்கு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒத்தாசை அனுப்புகிறவரே
351. சங். 20:6 – அபிஷேகம் பண்ணினவரை இரட்சிக்கிற கர்த்தாவே
352. சங். 21:2 – எங்கள் உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதவரே
353. சங். 21:6- என்னை உம்;முடைய சமூகத்தில் மகிழ்ச்சியாக்குகிறவரே
354. சங். 22:3 – இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிறவரே
355. சங். 22:4 – நம்பிக்கை வைத்து நம்பினவர்களை விடுவிக்கிறவரே
356. சங். 22:10 – என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தேவனாயிருக்கிறவரே
357. சங். 22:26 – என்றென்றைக்கும் இருதயம் வாழும் என்ற நல்லவரே
358. சங். 23:3 – என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே
359. சங். 23:3 – என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறவரே
360. சங். 23:4 – என்னோடு கூட இருக்கிற தேவனே
361. சங். 23:5 – என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணியவரே
362. சங். 23:5 – சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தம் செய்தவரே
363. சங். 24:8 – யுத்தத்தில் வல்லமையும் பராக்கிரமமுள்ள கர்த்தாவே
364. சங். 24:10 – மகிமையின் ராஜாவாகிய சேனைகளின் கர்த்தாவே
365. சங். 25:4 – உம்முடைய பாதைகளை எனக்குப் போதிக்கிறவரே
366. சங். 25:5 – உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்துகிறவரே
367. சங். 25:12 – பயப்படுகிற மனிதனுக்கு தன் வழியைப் போதிப்பவரே
368. சங். 25:17 – என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கி விடுவிப்பவரே
369. சங். 26:11 – என்மேல் இரங்கி என்னை மீட்டுக் கொண்டவரே
370. சங். 27:1 – என் ஜீவனின் பெலனான கர்த்தாவே
371. சங். 27:5 – என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துகிறவரே
372. சங். 27:5 – எனது தீங்குநாளில் தம்முடைய கூடாரத்தில் மறைத்தவரே
373. சங். 27:6 – என் சத்துருக்களுக்கு மேலாக என் தலையை உயர்த்தியவரே
374. சங். 28:8 – அபிஷேகம் பண்ணியவர்க்கு அரணான அடைக்கலமானவரே
375. சங். 29:2 – பரிசுத்த அலங்காரத்துடனே தொழுது கொள்ளுங்கள் என்றவரே
376. சங். 29:4 – வல்லமையும், மகத்துவமுமான சத்தம் உடைய கர்த்தாவே
377. சங். 29:5 – தமது சத்தத்தினால் கேதுரு மரங்களை முறிக்கிறவரே
378. சங். 29:7 – தமது சத்தத்தினால் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கிறவரே
379. சங். 29:8 – தமது சத்தத்தினால் வனாந்தரத்தை அதிரப் பண்ணுகிறவரே
380. சங். 29:9 – தமது சத்தத்தினால் பெண்மான்களை ஈனும்படி செய்கிறவரே
381. சங். 29:10 – என்றென்றைக்கும் இராஜாவாக வீற்றிருக்கிறவரே
382. சங். 29:11 – தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி ஆசீர்வதிக்கிறவரே
383. சங். 30:1 – என்னைக் கைதூக்கி எடுத்த கர்த்தாவே
384. சங். 30:3 – என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணுகிறவரே
385. சங். 30:3 – என்னை உயிரோடே காக்கிறவரே
386. சங். 30:5 – எனக்கு விடியற் காலத்திலே களிப்புண்டாக்குகிறவரே
387. சங். 30:11 – என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுகிறவரே
388. சங். 31:4 – எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு நீங்கலாக்குகிறவரே
389. சங். 31:5 – சத்திய பரனாகிய கர்த்தாவே
390. சங். 31:7 – என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவரே
391. சங். 32:5 – என் பாவத்தின் தோஷத்தை மன்னிக்கிறவரே
392. சங். 32:8 – எனக்குப் போதித்து நடக்க வேண்டிய வழியைக் காட்டுகிறவரே
393. சங். 32:8 – என்மேல் கண்ணை வைத்து ஆலோசனைத் தருகிறவரே
394. சங். 32:10 – நம்பியிருக்கிறவனை கிருபையினால் சூழந்து கொண்டவரே
395. சங். 33:5 – நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவரே
396. சங். 33:5 – பூமியைத் தமது காருண்யத்தினால் நிறைத்திருக்கிறவரே
397. சங். 33:6 – வார்த்தையினால் வானங்களை உண்டாக்கியவரே
398. சங். 33:6 – சுவாசத்தினால் சர்வசேனையை உண்டாக்கியவரே
399. சங். 33:7 – ஆழமான ஜலத்தைப் பொக்கிஷமாக வைக்கிறவரே
400. சங். 33:7 – சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்தவரே
401. சங். 33:15 – மனுஷனின் இருதயங்களையெல்லாம் உருவாக்குகிறவரே
402. சங். 33:19 – பஞ்சகாலத்தில் உயிரோடே காக்கிறவரே
403. சங். 34:4 – என்னை எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி மீட்கிறவரே
404. சங். 34:8 – கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்றவரே
405. சங். 34:15 – தமது கண்களால் நீதிமான்களை நோக்கிப் பார்க்கிறவரே
406. சங். 34:18 – நொறுங்குண்ட இருதயத்தார்க்கு சமீபமாயிருக்கிறவரே
407. சங். 34:20 – என்னுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறவரே
408. சங். 36:8 – உமது பேரின்ப நதியினால் எங்கள் தாகத்தைத் தீர்க்கிறவரே
409. சங். 36:9 – ஜீவ ஊற்றை உடையவரே
410. சங். 37:4 – என் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்கிறவரே
411. சங். 37:5 – நம்பின காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற அற்புதரே
412. சங். 37:23 – நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப் படுத்துகிறவரே
413. சங். 37:27 – என்றென்றைக்கும் நிலைத்திருக்க நன்மை செய் என்றவரே
414. சங். 37:28 – தமது பரிசுத்தவான்களை கைவிடாத நல்லவரே
415. சங். 37:34 – என்னை உயர்த்துகிற கர்த்தாவே
416. சங். 40:2 – என்னை பயங்கரமான குழியிலிருந்து தூக்கி எடுத்தவரே
417. சங். 40:2 – என்னை உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தவரே
418. சங். 40:17 – என்மேல் நினைவாயிருக்கிற கர்த்தாவே
419. சங். 41:2 – என்னைப் பாதுகாத்து உயிரோடே வைப்பவரே
420. சங். 41:3 – வியாதியின் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுபவரே
421. சங். 41:3 – படுக்கையில் வியாதியாய்க் கிடக்கிறவனைத் தாங்குகிறவரே
422. சங். 41:11 – என்மேல் பிரியமாயிருக்கிற தேவனே
423. சங். 41:12 – என்னை உம்முடைய சமூகத்தில் நிலை நிறுத்துகிறவரே
424. சங். 42:8 – பகற்காலத்திலே கிருபையை கட்டளையிடுகிறவரே
425. சங். 43:3 – உமது வெளிச்சத்தையும், சத்தியத்தையும் அனுப்புகிறவரே
426. சங். 44:21 – இருதயத்தின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறவரே
427. சங். 45:2 – எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவரே
428. சங். 45:2 – உம்முடைய உதடுகளினால் அருள் பொழிகிறவரே
429. சங். 45:4 – நீதியின் மகத்துவத்திலே ஜெயமாக வருகிறவரே
430. சங். 45:5 – கூர்மையான அம்புகள் உடையவரே
431. சங். 45:7 – என்னை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணுகிறவரே
432. சங். 45:8 – தந்தத்தினால் செய்த அரண்மனையிலிருந்து புறப்பட்டவரே
433. சங். 46:1 – என் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவரே
434. சங். 46:4 – பரிசுத்த ஸ்தலத்தில் வாசம்பண்ணும் உன்னதமானவரே
435. சங். 46:7 – எனக்கு உயர்ந்த அடைக்கலமான சேனையின் கர்த்தாவே
436. சங். 46:9 – பூமியின் கடைமுனைமட்டும் யுத்தம் ஓயப் பண்ணுகிறவரே
437. சங். 46:10 – பூமியிலே ஜாதிகளுக்குள்ளே உயர்ந்து இருப்பவரே
438. சங். 47:2 – பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவே
439. சங். 47:4 – சிறப்பான தேசத்தை சுதந்தரமாக தெரிந்து தருகிறவரே
440. சங். 47:7 – பூமியனைத்திற்கும் ராஜாவான தேவனே
441. சங். 47:8 – தமது பரிசுத்த சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவரே
442. சங். 48:1 – பரிசுத்த பர்வதத்தில் மிகவும் துதிக்கப்படத்தக்கவரே
443. சங். 48:2 – மகாராஜாவின் நகரமான சீயோன் பர்வதம் ஆன தேவனே
444. சங். 48:10 – உமது வலதுகரத்தை நீதியால் நிறைத்திருக்கிறவரே
445. சங். 48:11 – நியாயத் தீர்ப்புகளில் சீயோனை மகிழச் செய்கிறவரே
446. சங். 48:14 – மரணபரியந்தமும் எங்களை நடத்துகிற பிதாவே
447. சங். 49:15 – என் ஆத்துமாவை பாதாளத்தின் வல்லமைக்கு தப்புவித்தவரே
448. சங். 50:2 – பூரண வடிவுள்ள சியோனிலிருந்து பிரகாசிக்கிறவரே
449. சங். 50:6 – தேவனே, நீதியின் நியாயாதிபதியே
450. சங். 50:15 -ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு என்றவரே
451. சங். 51:10 – நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பிக்கிறவரே
452. சங். 51:14 – இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கி விடுவிக்கிறவரே
453. சங். 54:2 – என் வாயின் வார்த்தைகளுக்குச் செவி கொடுப்பவரே
454. சங். 55:18 – என் ஆத்துமாவை சமாதானத்துடன் மீட்டவரே
455. சங். 55:22 – நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டாதவரே
456. சங். 56:8 – என் கண்ணீரை தம்முடைய துருத்தியில் வைத்திருக்கிறவரே
457. சங். 57:1 – என் விக்கினங்கள் கடந்து போகச் செய்கிறவரே
458. சங். 57:10 – உமது கிருபையும், சத்தியமும் வான பரியந்தம் உயர்த்தியவரே
459. சங். 59:4 – எனக்குத் துணைசெய்ய விழித்து நோக்கிப் பார்க்கிறவரே
460. சங். 59:10 – உம்முடைய கிருபையினால் என்னைச் சந்திக்கிற தேவனே
461. சங். 60:4 – தமக்குப் பயந்தவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுக்கிறவரே
462. சங். 60:11 – இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்கிற அற்புதரே
463. சங். 61:2 – என்னை உயரமான கன்மலையில்; கொண்டுபோய் விடுகிறவரே
464. சங். 61:3 – எனக்கு அடைக்கலமும் பெலத்த துருகமுமாயிருக்கிறவரே
465. சங். 63:3 – ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை மேலானதற்கே
466. சங். 64:10 – நம்புகிற நீதிமானை மகிழ வைக்கிற கர்த்தாவே
467. சங். 65:2 – ஜெபத்தைக் கேட்கிறவரே
468. சங். 65:5 – எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறவரே
469. சங். 65:6 – தமது வல்லமை பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தியவரே
470. சங். 65:7 – கடல் அலைகளின் இரைச்சலை அமர்த்துகிறவரே
471. சங். 65:8 – காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறவரே
472. சங். 65:9 – பூமியை விசாரித்து அதற்கு நீர்ப் பாய்ச்சுகிறவரே
473. சங். 65:9 – பூமியைத் திருத்தி தானியத்தை மிகவும் விளைவிக்கிறவரே
474. சங். 65:9 – பூமியை தேவ நதியினால் மிகவும் செழிப்பாக்குகிறவரே
475. சங். 65:11 – வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறவரே
476. சங். 66:6 – கடலை உலர்ந்த தரையாக மாற்றிய வல்லவரே
477. சங். 66:9 – நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறவரே
478. சங். 66:12 – செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டவரே
479. சங். 67:2 – உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிப்பவரே
480. சங். 68:9 – சம்பூரண மழையைப் பெய்யப் பண்ணுகிற தேவனே
481. சங். 68:10 – ஏழைகளைப் பராமரிக்கிற பரிசுத்தாவியே
482. சங். 68:18 – மனுஷருக்குள் வாசம் பண்ணும் கர்த்தாவே
483. சங். 68:24 – பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிறவரே
484. சங். 68:33 – தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப் பண்ணுகிறவரே
485. சங். 69:14 – என்னை சேற்றினின்று தூக்கியெடுத்த கர்த்தாவே
486. சங். 69:18 – என் ஆத்துமாவை விடுதலைப் பண்ணியவரே
487. சங். 69:29 – எனக்கு உயர்ந்த அடைக்கலமானவரே
488. சங். 69:33 – எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிற நல்லவரே
489. சங். 69:35 – யூதாவின் பட்டணங்களைக் கட்டுகிறவரே
490. சங். 70:5 – என் துணையும் என்னை விடுவிக்கிறவருமான கர்த்தாவே
491. சங். 71:1 – நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்கிறவரே
492. சங். 71:3 – என் கன்மலையும் என் கோட்டையுமான கர்த்தாவே
493. சங். 71:5 – என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையாயிருக்கிறவரே
494. சங். 71:6 – நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் ஆதரிப்பவரே
495. சங். 71:6 – என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவரே
496. சங். 71:9 – முதிர்ந்த வயதிலும் என்னைத் தள்ளிவிடாத தேவனே
497. சங். 71:9 – என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதவரே
498. சங். 72:4 – ஏழையின் பிள்ளைகளை இரட்சிக்கிற தேவனே
499. சங். 72:6 – பூமியை நனைக்கும் தூறலைப்போல இறங்குகிறவரே
500. சங். 72:12 – கூப்பிடுகிற எளியவனை விடுவிக்கிற வல்லவரே
501. சங். 72:12 – உதவியற்ற சிறுமையானவனை விடுவிக்கிறவரே
502. சங். 72:13 – பலவீனனுக்கும் எளியவனுக்கும் இரங்குகிறவரே
503. சங். 72:13 – எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிக்கிறவரே
504. சங். 72:15 – எந்நாளும் ஸ்தோத்தரிக்கப்படுகிற பிதாவே
505. சங். 73:23 – என் வலது கையைப் பிடித்துத் தாங்குகிறவரே
506. சங். 73:24 – உமது ஆலோசனையின்படி என்னை நடத்துகிறவரே
507. சங். 73:26 – இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறவரே
508. சங். 74:12 – பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்கிறவரே
509. சங். 74:12 – பூமியின் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜாவே
510. சங். 74:13 – வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்த வல்லவரே
511. சங். 74:15 – ஊற்றையும் ஆற்றையும் பிளந்து வழி விடுகிற அற்புதரே
512. சங். 74:17 – கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினவரே
513. சங். 75:10 – நீதிமானுடைய கொம்புகளை உயர்த்துகிறவரே
514. சங். 76:4 – பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமானவரே
515. சங். 77:14 – அதிசயங்களை செய்கிற வல்லமை உள்ள தேவனே
516. சங். 77:15 – ஜனங்களை உமது புயத்தினாலே மீட்டுக் கொண்டவரே
517. சங். 77:18 – சுழல்காற்றில் முழங்கி சத்தமிடுகிற கர்த்தாவே
518. சங். 77:18 – மின்னலினால் பூச்சக்கரத்தை பிரகாசிக்கிறவரே
519. சங். 78:2 – பூர்வகாலத்து மறைபொருளை வெளிப்படுத்துகிறவரே
520. சங். 78:13 – கடலைப் பிளக்கிறவரே
521. சங். 78:13 – ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்கிறவரே
522. சங். 78:15 – வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளக்கிறவரே
523. சங். 78:16 – கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச் செய்கிறவரே
524. சங். 78:23 – உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிடுகிறவரே
525. சங். 78:23 – வானத்தின் கதவுகளைத் திறக்கிறவரே
526. சங். 78:24 – வானத்தின் தானியத்தைக் கொடுத்தவரே
527. சங். 78:25 – ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்புகிறவரே
528. சங். 78:26 – தம்முடைய வல்லமையினால் தென்றலை வீச செய்கிறவரே
529. சங். 78:68 – பிரியமான யூதா கோத்திரத்தைத் தெரிந்தவரே
530. சங். 79:9 – எங்களை விடுவித்து பாவங்களை நிவிர்த்தி யாக்குகிறவரே
531. சங். 80:8 – எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டு வந்தவரே
532. சங். 81:7 – நெருக்கத்திலே என்னைத் தப்புவித்தவரே
533. சங். 81:7 – இடிமுழக்கம் உண்டாகும் இடத்திலிருந்து உத்தரவு தருகிறவரே
534. சங். 81:16 – கன்மலையின் தேனினால் என்னைத் திருப்தியாக்குகிறவரே
535. சங். 81:16 – உச்சிதமான கோதுமையினால் போஷிப்பவரே
536. சங். 83:17 – யேகோவா, பூமியனைத்தின் மேலும் உன்னதமானவரே
537. சங். 84:11 – கிருபையையும், மகிமையையும் அருளுகிற கர்த்தாவே
538. சங். 84:11 – உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மை செய்கிறவரே
539. சங். 85:2 – ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து பாவத்தை மூடியவரே
540. சங். 86:4 – அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குகிறவரே
541. சங். 86:16 – அடியானுக்கு உமது வல்லமையை அருளுகிறவரே
542. சங். 86:17 – எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறவரே
543. சங். 86:17 – எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பிக்கிறவரே
544. சங். 87:2 – சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறவரே
545. சங். 89:9 – சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே
546. சங். 89:17 – உம்முடைய தயவினால் எங்கள் கொம்பை உயர்த்துகிறவரே
547. சங். 89:20 – பரிசுத்த தைலத்தினால் என்னை அபிஷேகம் பண்ணியவரே
548. சங். 89:21 – என் கை உன்னோடே உறுதியாயிருக்கும் என்றவரே
549. சங். 90:14 – காலையிலே கிருபையால் என்னை திருப்தியாக்கியவரே
550. சங். 91:3 – என்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிப்பவரே
551. சங். 91:3 – என்னைப் பாழாக்கும் கொள்ளைநோய்க்கு தப்புவிப்பவரே
552. சங். 91:10 – வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற கர்த்தாவே
553. சங். 91:11 – என்னைக் காக்கும்படி தூதர்களுக்கு கட்டளையிடுகிறவரே
554. சங். 91:14 – என்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறவரே
555. சங். 92:10 – என்னைப் புது எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறவரே
556. சங். 93:1 – ராஜரீக மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிறவரே
557. சங். 93:4 – உன்னதத்திலே வல்லமையுள்ள பிதாவாகிய தேவனே
558. சங். 93:5 – பரிசுத்தத்தை ஆலயத்தின் அலங்காரமாக்கியவரே
559. சங். 94:2 – பூமியின் நியாயாதிபதியே
560. சங். 94:10 – மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே
561. சங். 94:22 – நான் நம்பியிருக்கிற கன்மலையான கர்த்தாவே
562. சங். 95:3 – மகா தேவனும், மகா ராஜனுமான ராஜாவே
563. சங். 96:13 – பூமியை நீதியோடு நியாயந்தீர்க்க வருகிற வல்லவரே
564. சங். 97:1 – ராஜரீகம் பண்ணுகிற கர்த்தாவே
565. சங். 97:2 – நீதியும், நியாயமும் சிங்காசனத்தின் ஆதாரமாக்கியவரே
566. சங். 97:4 – மின்னல்களினால் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பவரே
567. சங். 97:5 – பர்வதங்களை மெழுகைப்போல் உருகச்செய்தவரே
568. சங். 97:9 – பூமி முழுவதும் மிகவும் உயர்ந்திருக்கிற உன்னதமானவரே
569. சங். 97:10 – பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றுகிறவரே
570. சங். 99:1 – கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறவரே
571. சங். 99:7 – மேகஸ்தம்பத்திலிருந்து மோசேயோடே பேசிய கர்த்தாவே
572. சங். 101:6 – உண்மையானவர்களுடன் வாசம் பண்ணுகிறவரே
573. சங். 102:12 – நீரோ என்றென்றைக்கும் இருக்கிற கர்த்தாவே
574. சங். 102:15 – சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுகிறவரே
575. சங். 102:16 – திக்கற்றவர்களின் ஜெப விண்ணப்பத்தை அங்கீகரிப்பவரே
576. சங். 103:3 – என் நோய்களையெல்லாம் குணமாக்கியவரே
577. சங். 103:4 – என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிறவரே
578. சங். 103:13 – தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிற கர்த்தாவே
579. சங். 104:1-மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறவரே
580. சங். 104:2 – ஒளியை வஸ்திரமாகத் தரித்தவரே
581. சங். 104:2 – வானங்களைத் திரையைப் போல் விரித்தவரே
582. சங். 104:3 – மேகங்களைத் தமது இரதமாக்கியவரே
583. சங். 104:5 – பூமி நிலை பெயராதபடி ஆதாரங்கள் மேல் ஸ்தாபித்தவரே
584. சங். 104:10 – பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறவரே
585. சங். 104:14-மனுஷனுக்கு உபயோகமான பயிர்களை முளைப்பிக்கிறவரே
586. சங். 104:19 – சந்திரனைக் காலக் குறிப்புகளுக்காகப் படைத்தவரே
587. சங். 104:24 – பூமியை உம்முடைய பொருள்களினால் நிறைத்தவரே
588. சங். 104:25 – விஸ்தாரமான சமுத்திரத்தை நிறைத்த வல்லவரே
589. சங். 104:30 – உம்முடைய ஆவியை அனுப்பி சிருஷ்டித்தவரே
590. சங். 104:30 – பூமியின் ரூபத்தை புதிதாக்குகிறவரே
591. சங். 105:24 – தம்முடைய ஜனங்களை பலவான்களாக்கியவரே
592. சங். 106:9 – சமுத்திர ஆழங்களில் நடந்து போகப்பண்ணியவரே
593. சங். 107:15 – வெண்கலக் கதவுகளை உடைக்கிற கர்த்தாவே
594. சங். 107:15 – இருப்புத் தாழ்ப்பாள்களை முறிக்கிற கர்த்தாவே
595. சங். 107:20 – தமது வசனத்தை அனுப்பி எங்களைக் குணமாக்கியவரே
596. சங். 107:35 – அவாந்தர வெளியைத் தண்ணீர் தடாகமாக்குகிறவரே
597. சங். 107:35 – வறண்ட நிலத்தை நீரூற்றுகளாக மாற்றுகிறவரே
598. சங். 110:2 – சீயோனிலிருந்து செங்கோலின் வல்லமையை அனுப்புகிறவரே
599. சங். 112:4 – செம்மையானவர்களுக்கு வெளிச்சமாக உதிக்கிறவரே
600. சங். 113:7 – சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே
601. சங். 113:7 – எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே
602. சங். 114:8 – கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே
603. சங். 114:8 – கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிறவரே
604. சங். 115:3 – பரலோகத்தில் இருக்கிற தேவனே
605. சங். 115:12 – எங்களை நினைத்திருக்கிற கர்த்தாவே
606. சங். 115:13 – பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பவரே
607. சங். 115:16 – பூமியை மனுபுத்திரருக்கு கொடுத்தவரே
608. சங். 116:5 – கிருபையும், நீதியும், மன உருக்கமானவரே
609. சங். 116:8 – என் காலை இடறுதலுக்கு தப்புவித்தவரே
610. சங். 116:8 – என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்புவித்தவரே
611. சங். 116:16 – என் கட்டுகளை அவிழ்த்துவிட்ட கர்த்தாவே
612. சங். 118:5 – நெருக்கத்திலே கூப்பிட்டேன், விசாலத்திலே வைத்தவரே
613. சங். 118:6 – என் பட்சத்தில் இருக்கிற கர்த்தாவே
614. சங். 118:22 – தள்ளின கல்லை மூலைக்கு தலைக் கல்லாக மாற்றியவரே
615. சங். 118:27 – என்னைப் பிரகாசிப்பிக்கிற ஒளியான தேவனே
616. சங். 119:12 – உம்முடைய பிரமாணங்களை எனக்கு போதிக்கிற தேவனே
617. சங். 119:73 – தமது கரங்களால் என்னை உண்டாக்கி உருவாக்கினவரே
618. சங். 119:77 – உம்முடைய வேதத்தை என் மனமகிழ்ச்சியாக தந்தவரே
619. சங். 119:98 – என்னை அதிக ஞானமுள்ளவனாக மாற்றியவரே
620. சங். 119:103 -தேனிலும் மதுரமானவர், வார்த்தையில் இனிமையானவரே
621. சங். 119:105 – என் பாதைகளுக்கு வெளிச்சமாயிருக்கிறவரே
622. சங். 119:135 – அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிப்பவரே
623. சங். 121:4 – எங்களை உறங்காமலும், தூங்காமலும் காக்கிறவரே
624. சங். 121:7 – என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பவரே
625. சங். 122:3 – எருசலேமை இசைவிணைப்பான நகரமாய் கட்டியவரே
626. சங். 122:7 – என் அலங்கத்திற்குள்ளே சமாதானம் தருகிறவரே
627. சங். 122:7 – என் அரண்மனைக்குள்ளே சுகம் தருகிறவரே
628. சங். 127:3 – தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரையளிக்கிறவரே
629. சங். 128:2 – எனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாக்குகிறவரே
630. சங். 128:5 – சீயோனிலிருந்து என்னை ஆசீர்வதிக்கிற தேவனே
631. சங். 132:13 – சீயோன் தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பியவரே
632. சங். 135:5 – எல்லா தேவர்களுக்கும் மேலான பிதாவே
633. சங். 135:7 – காற்றை பண்டகசாலையிலிருந்து புறப்படப் பண்ணுகிறவரே
634. சங். 136:4 – ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரே
635. சங். 136:5 – வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரே
636. சங். 136:6 – தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரே
637. சங். 136:8 – பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரே
638. சங். 136:9 – இரவில் ஆளச் சந்திரனைப் படைத்தவரே
639. சங். 136:13 – சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரே
640. சங். 136:23 – எங்களுடைய தாழ்மையில் எங்களை நினைத்தவரே
641. சங். 136:25 – மாம்சமான யாவருக்கும் ஆகாரம் கொடுக்கிறவரே
642. சங். 138:6 – தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்த்து உயர்த்துகிறவரே
643. சங். 139:2 – என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிற ஞான தேவனே
644. சங். 139:4 – என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே அறிகிறவரே
645. சங். 139:5 – தமது கரத்தை என்மேல் வைக்கிற கர்த்தாவே
646. சங். 139:13 – என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றியவரே
647. சங். 139:14 -பிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உண்டாக்கினவரே
648. சங். 139:15 – என்னை ஒளிப்பிடத்திலே உண்டாக்கியவரே
649. சங். 139:16 – உம்முடைய கண்களால் என் கருவைக் கண்டவரே
650. சங். 139:17 – எத்தனை அருமையான ஆலோசனைகள் கொடுப்பவரே
651. சங். 140:13 – செம்மையானவர்கள் சமூகத்தில் வாசம் பண்ணுகிறவரே
652. சங். 143:10 – என்னை செம்மையான வழியிலே நடத்தும் நல்ல ஆவியே
653. சங். 145:3 – மிகவும் புகழப்படத் தக்கவரான பெரிய கர்த்தாவே
654. சங். 145:8 – இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் உடையவரே
655. சங். 145:15 – எல்லா ஜீவன்களுக்கும் ஆகாரம் கொடுக்கிறவரே
656. சங். 145:18 – கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கிறவரே
657. சங். 146:7 – பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே
658. சங். 146:8 – மடங்கடிக்கப் பட்டவர்களை தூக்கி விடுகிறவரே
659. சங். 146:9 – பரதேசிகளை காப்பாற்றுகிற கர்த்தாவே
660. சங். 146:9 – திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறவரே
661. சங். 147:3 – நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்குகிறவரே
662. சங். 147:4 – நட்சத்திரங்களை எண்ணி பேரிட்டு அழைக்கிறவரே
663. சங். 147:5 – பெரியவரும் மகா பெலமுள்ளவருமான பிதாவே
664. சங். 147:5 – அளவில்லாத அறிவு உடைய ஆண்டவரே
665. சங். 147:6 – சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிற கர்த்தாவே
666. சங். 147:15 – பூமியிலே வார்த்தையை மகா தீவிரமாய் அனுப்புகிறவரே
667. சங். 148:3 – பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களையும் படைத்தவரே
668. சங். 148:6 – இயற்கைக்கு மாறாத பிரமாணத்தை நியமித்தவரே
669. சங். 149:4 – இரட்சிப்பால் சாந்த குணமுள்ளவர்களை அலங்கரிப்பவரே
670. சங். 149:4 – தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறவரே
671. நீதி. 1:3 – விவேகம், நீதி, நியாயம், நிதானம், உபதேசத்தைத் தருகிறவரே
672. நீதி. 1:7 – கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்றவரே
673. நீதி. 1:23 – என் ஆவியை உங்களுக்கு அருளுவேன் என்றவரே
674. நீதி. 2:6 – அறிவும் புத்தியும் ஞானத்தையும் தருகிற ஞான கர்த்தாவே
675. நீதி. 2:7 – நீதிமான்களுக்கு மெய்ஞானத்தைத் தருகிறவரே
676. நீதி. 2:7 – உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு கேடகமாய் இருக்கிறவரே
677. நீதி. 2:10 – ஞானத்தை என் இருதயத்தில் பிரவேசிக்கச் செய்கிறவரே
678. நீதி. 2:10 – அறிவை என் ஆத்துமாவுக்கு இன்பமாகத் தருகிறவரே
679. நீதி. 3:2 – எனக்கு நீடித்த நாட்களையும் தீர்க்காயுசையும் தருகிறவரே
680. நீதி. 3:19 – ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்திய கர்த்தாவே
681. நீதி. 3:19 – புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்த பிதாவே
682. நீதி. 3:20 – உம்முடைய ஞானத்தினாலே ஆழங்களைப் பிரித்தவரே
683. நீதி. 3:20 – ஆகாயத்திலிருந்து பனியைப் பொழிகிற தேவனே
684. நீதி. 3:21 – மெய்ஞ்ஞானம், நல்லாலோசனையைக் காத்துக் கொள் என்றவரே
685. நீதி. 3:33 – நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறவரே
686. நீதி. 4:7 – ஞானத்தையும், புத்தியையும் சம்பாதித்துக் கொள் என்றவரே
687. நீதி. 4:23 – எல்லாக் காவலோடும் இருதயத்தை காத்துக்கொள் என்றவரே
688. நீதி. 5:21 – என்னுடைய வழிகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கிறவரே
689. நீதி. 8:6 – உத்தம காரியங்களை வசனிக்கும் உதடுகள் உடையவரே
690. நீதி. 8:11 – முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது என்றவரே
691. நீதி. 8:14 – ஆலோசனையும், புத்தியும், வல்லமையும் உடையவரே
692. நீதி. 8:17 – அதிகாலையில் தேடுகிறவர்கள் உம்மை கண்டதற்காக
693. நீதி. 8:29 – சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடி படைத்தவரே
694. நீதி. 8:29 – பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தியவரே
695. நீதி. 9:11 – என் ஆயுசின் வருஷங்களை விருத்தியாக்குகிறவரே
696. நீதி. 10:2 – மரணத்துக்குத் தப்புவிக்கும் நீதியின் தேவனே
697. நீதி. 10:12 – அன்போ சகல பாவங்களையும் மூடும் என்றவரே
698. நீதி. 10:22 – கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும் என்றவரே
699. நீதி. 11:9 – நீதிமானை அறிவினால் தப்புவிக்கிறவரே
700. நீதி. 11:28 – நீதிமான்களை துளிரைப் போல தழைக்கச் செய்கிறவரே
701. நீதி. 12:13 – நீதிமானை நெருக்கத்தினின்று நீக்குகிற நல்லவரே
702. நீதி. 12:19 – சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும் என்றவரே
703. நீதி. 13:14 – மரணக் கண்ணிகளுக்குத் தப்புவிக்கிறவரே
704. நீதி. 13:20 – ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான் என்றவரே
705. நீதி. 14:29 – நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான் என்றவரே
706. நீதி. 15:29 – நீதிமான்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவரே
707. நீதி. 15:30 – நற்செய்தியால் எலும்புகளைப் புஷ்டியாக்கும் வல்லவரே
708. நீதி. 15:30 – கண்களின்ஒளியால் இருதயத்தைப் பூரிப்பாக்குகிறவரே
709. நீதி. 16:21 – உதடுகளின் மதுரத்தால் கல்வியைப் பெருகப் பண்ணுகிறவரே
710. நீதி. 16:24 – சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரம் ஆனவரே
711. நீதி. 16:32 – தன் மனதை அடக்குகிறவன் உத்தமன் என்றவரே
712. நீதி. 18:15 – புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும் என்றவரே
713. நீதி. 20:15 – அறிவுள்ள உதடுகள் விலையுயர்ந்த இரத்தினம் என்றவரே
714. நீதி. 20:27 – மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம் என்பதற்;காக
715. நீதி. 21:2 – மனிதனுடைய இருதயங்ளை நிறுத்துப் பார்க்கிறவரே
716. நீதி. 21:8 – சுத்தமுள்ளவன் தன் கிரியையில் செம்மையானவன் என்றவரே
717. நீதி. 22:4 – எனது ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமான கர்த்தாவே
718. நீதி. 22:11- சுத்த இருதயத்தை விரும்புகிற உதடுகள் இனிமை என்றவரே
719. நீதி. 23:18 – நிச்சயமாகவே ஒரு முடிவை உண்டாக்குகிறவரே
720. நீதி. 24:14 – எனது ஆத்துமா இன்பமாக, உமது ஞானத்தைத் தருகிறவரே
721. நீதி. 24:16 – நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுப்புகிறவரே
722. நீதி. 28:1 – நீதிமான்களை சிங்கத்தைப் போல தைரியப் படுத்துகிறவரே
723. நீதி. 28:5 – தேடுகிறவர்களுக்கு சகலத்தையும் அறிவிக்கிற கர்த்தாவே
724. நீதி. 28:10 – உத்தமர்கள் நன்மையை சுதந்தரிப்பார்கள் என்றவரே
725. நீதி. 28:13 – பாவங்களை அறிக்கை செய்தவனுக்கு இரங்குகிறவரே
726. நீதி. 28:20 – உண்மையுள்ள மனுஷனை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பவரே
727. நீதி. 28:25 – நம்புகிறவனை செழிப்பாக்குகிற கர்த்தாவே
728. நீதி. 29:6 – நீதிமானை பாடி மகிழச் செய்கிறவரே
729. நீதி. 29:18 – வேதத்தைக் காக்கிறவனே பாக்கியவான் என்றவரே
730. நீதி. 29:25 – நம்புகிறவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறவரே
731. நீதி. 30:4 – காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவரே
732. நீதி. 30:4 – தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டியவரே
733. பிர. 3:19 – ஜீவன்களுக்கெல்லாம் ஒரே சுவாசத்தைக் கொடுக்கிறவரே
734. பிர. 7:29 – செம்மையான மனுஷனை உண்டாக்கினவரே
735. பிர. 8:1 – ஞானத்தினால் மனுஷன் முகத்தைப் பிரகாசிப்பவரே
736. பிர. 8:12 – தேவனுக்கு பயந்தவர்கள் நன்றாயிருப்பார்கள் என்றவரே
737. பிர. 9:18 – யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம் என்றவரே
738. பிர. 11:5 – கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகளை உருவாக்கியவரே
739. பிர. 11:10 – என் மாம்சத்திலிருந்து தீங்கை நீக்கிப் போடுகிறவரே
740. பிர. 12:14 – நன்மையும் தீமையும் நியாயத்திலே கொண்டு வருகிறவரே
741. உன். 1:2 – திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமான நேசம் உடையவரே
742. உன். 1:3 – ஊற்றுண்ட பரிமள தைலமான நாமம் உடையவரே
743. உன். 1:7,9 – என் ஆத்தும நேசரே, என் பிரியமான தேவனே
744. உன். 1:14 – தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றி பூங்கொத்தே
745. உன். 1:16 – பசுமையான ரூபமுள்ள இன்பமான நேசரே
746. உன். 2:1 – சாரோனின் ரோஜாவே, பள்ளத்தாக்கின் லீலியே
747. உன். 2:3 – காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போன்றவரே
748. உன். 2:9 – கிராதியின் வழியாய் மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறவரே
749. உன். 2:14 – உமது முகரூபம் அழகுமாயிருக்கிற கர்த்தாவே
750. உன். 2:14 – இன்பமான சத்தம் உடைய தேவனே
751. உன். 2:16 – லீலி புஷ்பங்களுக்குள்ளே உலாவுகிற என் நேசரே
752. உன். 3:6 – தூபஸ்தம்பங்களை போல் வனாந்தரத்திலிருந்து வருகிறவரே
753. உன். 5:10 – வெண்மையும் சிவப்புமான நேசரே
754. உன். 5:10 – பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
755. உன். 5:11 – தங்கமயமான தலையை உடையவரே
756. உன். 5:11 – சுருள் சுருளான தலைமயிரை உடையவரே
757. உன். 5:12 – புறாக்கண்கள் போன்ற கண்களை உடையவரே
758. உன். 5:13 – லீலி புஷ்பங்களை போன்ற உதடுகள் உடையவரே
759. உன். 5:13- கந்த வர்க்கப் பாத்திகளைப் போன்ற கன்னங்கள் உடையவரே
760. உன். 5:13 – புஷ்பங்களைப் போல வாசனையுள்ள வெள்ளைப்போளமே
761. உன். 5:14 – பொன் படிகப்பச்சை பதித்த கரங்களை உடையவரே
762. உன். 5:15 – வெள்ளைக்கல் தூண்களைப் போன்ற கால்கள் உடையவரே
763. உன். 5:15 – லீபனோன் கேதுரு போல சிறப்பான ரூபம் உடையவரே
764. உன். 5:16 – உமது வாய் மிகவும் மதுரமாயிருக்கிற தேவனே
765. உன். 5:16 – முற்றிலும் அழகுள்ள என் நேசரே
766. உன். 6:10 – அருணோதயம் போல் உதித்து வருகிறவரே
767. உன். 6:10 – சந்திரனைப் போல் அழகுள்ளவரே
768. உன். 6:10 – சூரியனைப் போல் பிரகாசமானவரே
769. உன். 6:11 – திராட்சச்செடி துளிர்விட்டு மாதளஞ்செடிக்குள் பூத்தவரே
770. ஏசா. 1:19 – நீங்கள் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் என்றவரே
771. ஏசா. 2:3 – சீயோனின் வேதமும் எருசலேமின் வசனமும் தருகிறவரே
772. ஏசா. 5:16 – நியாயத்தீர்ப்பினால் உயர்ந்த சேனைகளின் கர்த்தாவே
773. ஏசா. 5:16 – உயர்ந்த நீதியில் பரிசுத்தராய் விளங்குகிறவரே
774. ஏசா. 6:1 – வஸ்திரத் தொங்கலால் தேவாலயத்தை நிறைத்தவரே
775. ஏசா. 6:3 – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தரே
776. ஏசா. 6:7 – என் வாயைத் தொட்டு பாவத்தை நிவிர்த்தி செய்கிறவரே
777. ஏசா. 8:11 – என்மேல் உம்முடைய கரத்தை அமர்த்திய கர்த்தாவே
778. ஏசா. 8:18 – சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற தேவனே
779. ஏசா. 9:1 – கலிலேயா தேசத்தை மகிமைப் படுத்தியவரே
780. ஏசா. 9:6 – அதிசயமான ஆலோசனையில் வல்லமையுள்ள கர்த்தாவே
781. ஏசா. 9:6 – நித்திய பிதா, சமாதான பிரபுவே
782. ஏசா. 10:27 – அபிஷேகத்தினால் நுகம் முறிந்து போகும் என்றவரே
783. ஏசா. 11:2 – என்மேல் தங்கியிருக்கிற ஆவியான கர்த்தாவே
784. ஏசா. 11:3 – பயப்படுதலே உகந்த வாசனையாக விரும்பும் கர்த்தாவே
785. ஏசா. 11:5 – சத்தியத்தை இடைக்கச்சையாகக் கட்டியிருக்கிறவரே
786. ஏசா. 12:2 – யேகோவா என் பெலனும் என் கீதமுமானவரே
787. ஏசா. 12:5 – பூமியெங்கும் மகத்துவமான கிரியைகளைச் செய்கிறவரே
788. ஏசா. 12:6 – என் நடுவில் பெரியவராயிருக்கிற பரிசுத்தரே
789. ஏசா. 14:32 – சீயோனை அஸ்திபாரப்படுத்தின கர்த்தாவே
790. ஏசா. 16:5 – நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதி செய்கிறவரே
791. ஏசா. 16:5 – நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருக்கிறவரே
792. ஏசா. 19:1 – வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருபவரே
793. ஏசா. 25:1 – சத்தியமும் உறுதியுமான பூர்வ ஆலோசனை உடையவரே
794. ஏசா. 25:4 – ஏழைக்குப் பெலனான தேவனே
795. ஏசா. 25:8 – தமது ஜனத்தின் நிந்தையை முற்றிலும் நீக்கியவரே
796. ஏசா. 25:8 – மரணத்தை ஜெயமாக விழுங்கின கர்த்தாவே
797. ஏசா. 25:8 – எல்லா முகங்களின் கண்ணீரைத் துடைக்கிற தேவனே
798. ஏசா. 26:3 – என்னைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்கிறவரே
799. ஏசா. 26:4 – யேகோவா, நித்திய கன்மலையாயிருக்கிற கிறிஸ்துவே
800. ஏசா. 26:7 – நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறவரே
801. ஏசா. 26:12 – எங்களுக்காக கிரியைகளை நடத்தி வருகிறவரே
802. ஏசா. 27:2 – நல்ல திராட்சைத் தோட்டம் உண்டாக்குகிறவரே
803. ஏசா. 28:11 – ஜனத்தோடே அந்நிய பாஷையினால் பேசுகிறவரே
804. ஏசா. 28:16 – அஸ்திபாரமாக ஒரு கல்லை சீயோனிலே வைத்தவரே
805. ஏசா. 28:29 – செயலில் மகத்துவமான சேனையின் கர்த்தாவே
806. ஏசா. 28:29 -ஆலோசனையில் ஆச்சரியமான தேவனே
807. ஏசா. 30:18 – என்மேல் மனதுருகும்படி எழுந்திருக்கிற கர்த்தாவே
808. ஏசா. 30:18 – எனக்கு இரங்கும்படி காத்திருக்கிற நல்லவரே
809. ஏசா. 30:19 – உருக்கமாய் இரங்கி எனக்கு மறுஉத்தரவு தருகிறவரே
810. ஏசா. 30:26 – முறிவைக் கட்டி அடிக்காயத்தைக் குணமாக்குகிறவரே
811. ஏசா. 30:30 – கல்மழை, இடி, பெருவெள்ளம் போன்ற சத்தம் உடையவரே
812. ஏசா. 32:2 – பூமிக்குப் பெருங் கன்மலையின் நிழலாகவும் இருக்கிறவரே
813. ஏசா. 32:18 – அமைதியான இடங்களில் குடியிருக்கச் செய்கிறவரே
814. ஏசா. 35:10 – சீயோனுக்கு ஆனந்தக்களிப்புடன் பாடிவருவார்கள் என்றவரே
815. ஏசா. 35:10 – எங்கள் தலையின் மேல் நித்திய மகிழ்ச்சியை வைப்பவரே
816. ஏசா. 38:17 – ஆத்துமாவை அழிவின் குழிக்கு விலக்கி காப்பவரே
817. ஏசா. 38:17 – உமது முதுகுக்குப்பின், என் பாவங்களை எறிந்துவிட்டவரே
818. ஏசா. 40:8 – தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்றவரே
819. ஏசா. 40:10 – பராக்கிரமசாலியாக வருகிற கர்த்தராகிய ஆண்டவரே
820. ஏசா. 40:10 – தமது புயத்தினால் அரசாளுகிற பராக்கிரமசாலியே
821. ஏசா. 40:12 – பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கியவரே
822. ஏசா. 40:12 – தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்தவரே
823. ஏசா. 40:15 – தீவுகளை ஒரு அணுவைப் போல் தூக்குகிறவரே
824. ஏசா. 40:22- வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பியவரே
825. ஏசா. 40:22 – பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவரே
826. ஏசா. 40:28 – ஆராய்ந்து முடியாத புத்தியை உடைய கர்த்தாவே
827. ஏசா. 40:28 – பூமியின் கடையாந்தரங்களை சிருஷ்டித்தவரே
828. ஏசா. 40:29 – சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுக்கிறவரே
829. ஏசா. 41:10 – என்னை நீதியின் வலது கரத்தினால் தாங்குகிறவரே
830. ஏசா. 41:18 – பள்ளத்தாக்குகளின் நடுவே நீரூற்றுகளைத் திறக்கிறவரே
831. ஏசா. 42:5 – வானங்களைச் சிருஷ்டித்து அவைகளை விரித்தவரே
832. ஏசா.42:5 – ஜனத்துக்குச் சுவாசத்தையும் ஆவியையும் கொடுக்கிறவரே
833. ஏசா. 42:13 – யுத்தவீரனைப் போல் வைராக்கியம் உள்ளவரே
834. ஏசா. 43:2 – நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய் என்றவரே
835. ஏசா. 43:19 – இப்பொழுதே புதிய காரியத்தை தோன்ற செய்கிறவரே
836. ஏசா. 43:20 – அவாந்தர வெளியிலே ஆறுகளை உண்டாக்குகிறவரே
837. ஏசா. 44:3 – என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுகிறவரே
838. ஏசா. 44:7 – நிகழ்காரியம், வரும்காரியம் எங்களுக்கு அறிவிக்கிறவரே
839. ஏசா. 44:24 – ஒருவராய் வானங்களை விரித்து பூமியைப் பரப்பினவரே
840. ஏசா. 44:24 – என்னை தாயின் கர்ப்பத்தில் உருவாக்கின கர்த்தாவே
841. ஏசா. 44:26 – ஊழியர்கள் வார்த்தையை நிலைப்படுத்தி நிறைவேற்றுகிறவரே
842. ஏசா. 45:2 – கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறவரே
843. ஏசா. 45:4 – அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களைத் தருகிறவரே
844. ஏசா.45:11 – வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள் என்றவரே
845. ஏசா. 45:12 – பூமியை உண்டுபண்ணி மனுஷனைச் சிருஷ்டித்தவரே
846. ஏசா. 45:12 – சர்வ சேனையையும் கட்டளையிட்ட கர்த்தாவே
847. ஏசா. 45:19 – நீதியைப் பேசி யதார்த்தமானவைகளை அறிவிக்கிறவரே
848. ஏசா. 46:3 – தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் ஏந்தி, தாங்கினவரே
849. ஏசா. 46:4 – முதிர்வயது வரைக்கும் எங்களைத் தாங்குகிறவரே
850. ஏசா. 48:17 – பிரயோஜனமாய் இருக்கிறதை எனக்கு போதிக்கிறவரே
851. ஏசா. 48:21 – கன்மலையைப் பிளந்து தண்ணீரை சுரக்கப் பண்ணியவரே
852. ஏசா. 49:3 – நீ என் தாசன் என்று அழைத்தவரே
853. ஏசா. 49:8 – பூமியைச் சீர்ப்படுத்தி சுதந்தரிக்கப் பண்ணியவரே
854. ஏசா. 49:10 – எங்களை நீரூற்றுகளில் கொண்டுபோய் விடுகிறவரே
855. ஏசா. 49:13 – சிறுமைப்பட்டிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருக்கிற கர்த்தாவே
856. ஏசா. 49:16 – தம் உள்ளங்கைகளில் என்னை வரைந்திருக்கிறவரே
857. ஏசா. 50:4 – எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தவரே
858. ஏசா. 50:4 – காலைதோறும் என்னை எழுப்புகிற தேவனே
859. ஏசா. 51:16 – வானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திபாரப்படுத்தியவரே
860. ஏசா. 51:16 – என்னை கரத்தின் நிழலினால் மறைக்கிறவரே
861. ஏசா. 51:16 – தமது வார்த்தையை என் வாயிலே அருளியவரே
862. ஏசா. 52:7 – சீயோனில் ராஜரீகம் பண்ணுகிறவரே
863. ஏசா. 53:4 – எங்களுடைய பாடுகளை ஏற்றுக் கொண்டவரே
864. ஏசா. 53:4 – எங்களுடைய துக்கங்களைச் சுமந்தவரே
865. ஏசா. 53:5 – எங்களுடைய மீறுதல்களினால் காயப்பட்டவரே
866. ஏசா. 53:5 – எங்களுடைய அக்கிரமங்களினால் நொறுக்கப்பட்டவரே
867. ஏசா. 53:5 – உம்முடைய தழும்புகளால் எங்களை குணமாக்கியவரே
868. ஏசா. 53:11 – அநேகரை நீதிமான்களாக்கிய நீதிபரரே
869. ஏசா. 53:11 – எங்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து தீர்த்தவரே
870. ஏசா. 53:12 – அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து தீர்த்தவரே
871. ஏசா. 54:13 – எல்லா பிள்ளைகளுக்கும் போதிக்கிற கர்த்தாவே
872. ஏசா. 54:17 – உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போனதற்காக
873. ஏசா. 56:1 – நியாயத்தைக் கைக்கொண்டு நீதியைச் செய்யுங்கள் என்றவரே
874. ஏசா. 56:7 – தமது ஜெபவீட்டில் எங்களை மகிழப் பண்ணுகிறவரே
875. ஏசா. 57:2 – நேர்மையானவர்களை சமாதானத்தில் பிரவேசிக்க செய்கிறவரே
876. ஏசா. 57:15 – நொறுங்குண்டு பணிந்த ஆவியில் வாசம் செய்கிறவரே
877. ஏசா. 58:8 – என் சுகவாழ்வை சீக்கிரத்தில் துளிர்க்க செய்கிறவரே
878. ஏசா. 58:11 – நித்தமும் என் ஆத்துமாவைத் திருப்தி யாக்குகிறவரே
879. ஏசா. 59:17 – நீதியை மார்க்கவசமாக அணிந்தவரே
880. ஏசா. 59:17 – வைராக்கியத்தை சால்வையாகப் போர்த்தியவரே
881. ஏசா. 60:1 – உமது மகிமையை என்மேல் உதிக்கச் செய்தவரே
882. ஏசா. 60:5 – உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும் என்றவரே
883. ஏசா. 60:20 – உன் துக்க நாட்கள் முடிந்து போம் என்றவரே
884. ஏசா. 60:20 – எனக்கு நித்திய வெளிச்சமாயிருக்கிற கர்த்தாவே
885. ஏசா. 61:1 – சுவிசேஷத்தை அறிவிக்க என்னை அபிஷேகம் பண்ணியவரே
886. ஏசா. 61:3 – துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலத்தைத் தருகிறவரே
887. ஏசா. 61:7 – நித்திய மகிழ்ச்சியை எங்களுக்கு உண்டாக்குகிறவரே
888. ஏசா. 61:10 – இரட்சிப்பின் வஸ்திரத்தை எனக்கு உடுத்துகிற பிதாவே
889. 889. ஏசா. 61:10 – எனக்கு நீதியின் சால்வையைத் தரிப்பித்தவரே
890. ஏசா. 62:3 – என்னை அலங்காரமான கிரீடமாக மாற்றிய கர்த்தாவே
891. ஏசா. 62:4 – என் மேல் பிரியமாயிருக்கிற அன்பான தேவனே
892. ஏசா. 63:4 – எங்களை மீட்கும் வருஷமாக வருகிறவரே
893. ஏசா. 65:18 – சிருஷ்டித்ததினால் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள் என்றவரே
894. ஏசா. 65:24 – கூப்பிடுகிறதற்கு முன்னே மறு உத்தரவு கொடுக்கிறவரே
895. ஏசா. 66:1 – வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி என்றவரே
896. ஏசா. 66:2 – வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்க்கிறவரே
897. ஏசா. 66:12 – ஒரு நதியைப் போல சமாதானத்தைத் தருகிறவரே
898. ஏசா. 66:13 – என் தாய் தேற்றுகிறதுபோல என்னைத் தேற்றுகிறவரே
899. எரே. 1:5 – என்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தவரே
900. எரே. 1:5 – கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே பரிசுத்தம் பண்ணியவரே
901. எரே. 1:8 – என்னைக் காக்கும்படி என்னுடன் இருக்கிறவரே
902. எரே. 1:9 – என் வாயைத் தொட்டு வார்த்தையை வாயிலே வைத்தவரே
903. எரே. 1:12 – என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றவரே
904. எரே. 2:7 – தேசத்தின் செழிப்பான கனிகளைத் தருகிறவரே
905. எரே. 2:21 – என்னை உயர்குலத் திராட்சச் செடியாக நாட்டினவரே
906. எரே. 3:14 – எங்களைச் சீயோனுக்கு அழைத்துச் செல்கிறவரே
907. எரே. 3:15 – எங்கள் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பரைத் தந்தவரே
908. எரே. 3:22 – எங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குகிறவரே
909. எரே. 4:1 – நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்றவரே
910. எரே. 5:22 – சமுத்திர மணலை நித்திய பிரமாண எல்லையாய் வைத்தவரே
911. எரே. 10:12 – பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கியவரே
912. எரே. 10:13 – வானத்திலே திரளான தண்ணீரை உண்டாக்குகிறவரே
913. எரே. 10:13 – மழையுடனே மின்னல்களை உண்டாக்குகிறவரே
914. எரே. 10:16 – சர்வத்தையும் உருவாக்கியவரே
915. எரே. 11:19 – சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருக்கிறவரே
916. எரே. 11:20 – இருதயத்தின் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவரே
917. எரே. 11:20 – நீதியைச் சரிக்கட்டுகிற நீதியுள்ள நியாயாதிபதியே
918. எரே. 15:16 – உம்முடைய வார்த்தைகளை உட்கொள்ள செய்தவரே
919. எரே. 15:21 – என்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்குகிறவரே
920. எரே. 16:17 – என் எல்லா வழிகளின் மேலும் நோக்கமா யிருக்கிறவரே
921. எரே. 16:19 – நெருக்கப்படுகிற நாளில் எனக்கு அடைக்கலமானவரே
922. எரே. 16:19 – என் பெலனும், என் கோட்டையுமான சேனையின் கர்த்தாவே
923. எரே. 17:13 – ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தாவே
924. எரே. 17:17 – தீங்கு நாளில் எனக்கு அடைக்கலமானவரே
925. எரே. 18:6 – நாங்கள் உமது கையில் இருப்பதற்க்காக
926. எரே. 20:11- பராக்கிரம சாலியாய் என்னோடு இருக்கிறவரே
927. ஏரே. 20:13 – ஆத்துமாவைப் பொல்லாதவன் கைக்குத் தப்புவிக்கிறவரே
928. ஏரே. 21:8 – ஜீவ வழியை வைக்கிற கர்த்தாவே
929. எரே. 23:5 – ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம் பண்ணுகிறவரே
930. ஏரே. 23:5 – பூமியிலே நியாயத்தையும் நீதியையும் செய்கிறவரே
931. எரே. 23:23 – சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனாக இருக்கிறவரே
932. எரே. 23:29 – உமது வார்த்தை அக்கினியாய் இருக்கிறதே
933. எரே. 25:14 – என் கைகளின் கிரியைகளுக்குத் தக்கப் பலனளிப்பவரே
934. எரே. 29:13 – முழு இருதயத்தோடு தேடினால் கண்டுபிடிப்பீர்கள் என்றவரே
935. எரே. 29:14 – எங்கள் சிறையிருப்பைத் திருப்பிய கர்த்தாவே
936. எரே. 30:11 – என்னை இரட்சிப்பதற்காக என்னோடு இருக்கிறவரே
937. எரே. 31:3 – அநாதி சிநேகத்தால் என்னை சிநேகிக்கிறவரே
938. எரே. 31:3 – காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டவரே
939. ஏரே. 31:12 – ஆத்துமாவை நீர்ப்பாய்ச்சலான தோட்ட மாக்குகிறவரே
940. எரே. 31:14 – தமது ஜனங்களை நன்மையால் திருப்தி யாக்குகிறவரே
941. எரே. 31:23 – நீதியின் வாசஸ்தலமே; பரிசுத்த பர்வதமான தேவனே
942. ஏரே. 32:17 – வானத்தையும், பூமியையும் உண்டாக்கியவரே
943. எரே. 32:18 – ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரே
944. எரே. 32:19 – யோசனையிலே பெரியவNர் செயலிலே வல்லவரே
945. எரே. 33:3 – எனக்கு எட்டாத பெரிய காரியங்களை அறிவிப்பவரே
946. ஏரே. 33:6 – எங்களைக் குணமாக்கி பரிபூரண சமாதானத்தைத் தந்தவரே
947. ஏரே. 33:11 – ஸ்தோத்திர பலியோடு ஆலயத்திற்கு வாருங்கள் என்றவரே
948. ஏரே. 33:11 – தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்ற கர்த்தாவே
949. எரே. 33:14 – சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன் என்றவரே
950. எரே. 33:22 – வானத்து நட்சத்திரங்களை எண்ணுகிறவரே
951. ஏரே. 48:15 – சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜாவே
952. எரே. 51:15 – தமது ஞானத்தினால் பூச்சக்கரத்தைப் படைத்தவரே
953. எரே. 51:15 – வானத்தைத் தமது பேரறிவினால் விரித்திருக்கிறவரே
954. ஏரே. 51:16 – காற்றைத் தமது பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறவரே
955. எரே. 51:19 – சர்வத்தையும் உண்டாக்கினவரே
956. புல. 3:22 – இரக்கங்களுக்கு முடிவு இல்லாதவரே
957. புல. 3:31 – என்றென்றைக்கும் கைவிடாத ஆண்;;டவரே
958. எசே. 1:1 – வானங்களைத் திறந்து தேவ தரிசனங்களைத் தருகிறவரே
959. எசே. 1:13 – அக்கினியிலிருந்து மின்னல் புறப்படப் பண்ணுகிறவரே
960. எசே. 10:4 – ஆலயத்தை மகிமையின் பிரகாசத்தினால் நிரப்பியவரே
961. எசே. 11:19 – உள்ளத்திலே சதையான இருதயத்தைத் தருகிறவரே
962. எசே. 18:32 – மனந்திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள் என்றவரே
963. எசே. 34:26 – ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுகிறவரே
964. எசே. 34:26 – ஆசீர்வாதமான மழையை பெய்யப் பண்ணுகிறவரே
965. எசே. 36:26 – உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டவரே
966. எசே. 37:4,6 – உலர்ந்த எலும்புகளிலே மாம்சத்தை உண்டாக்கியவரே
967. எசே. 37:4,6 – உலர்ந்த எலும்புகளிலே நரம்புகளைச் சேர்த்தவரே
968. எசே. 37:4,6 – உலர்ந்த எலும்புகளைத் தோலினால் முடியவரே
969. எசே. 37:4,5 – உலர்ந்த எலும்புகளிலே ஆவியைப் பிரவேசிக்கச் செய்தவரே
970. எசே. 37:4,10 – எலும்புகளிலிருந்து மகாபெரிய சேனையை உருவாக்கியவரே
971. எசே. 39:26 – பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருக்கிறவரே
972. எசே. 43:2- கீழ்த்திசையிலிருந்து மகிமையாக வந்த தேவனே
973. எசே. 43:2- பெரு வெள்ளத்தின் இரைச்சலைப் போல சத்தம் உடையவரே
974. எசே. 43:2 -தம்முடைய மகிமையினால் பூமியை பிரகாசிக்கச் செய்தவரே
975. எசே. 43:4 – ஆலயத்தின் வாசல்வழியாய் மகிமையாய் பிரவேசிப்பவரே
976. எசே. 43:5 – தமது மகிமையால் ஆலயத்தை நிரப்பிய கர்த்தாவே
977. எசே. 43:6 – ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறவரே
978. எசே. 48:35 – ‘யேகோவா ஷம்மா’ எங்களோடு கூட இருக்கிறவரே
979. தானி. 2:19 – தரிசனத்திலே மறைபொருளை வெளிப்படுத்துகிறவரே
980. தானி. 2:21 – ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே
981. தானி. 2:21 – அறிவாளிகளுக்கு அறிவைக் கொடுக்கிறவரே
982. தானி. 2:22 – இருளில் இருக்கிறதை அறிகிற வல்லவரே
983. தானி. 2:28 – மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோக தேவனே
984. தானி. 2:28 – கடைசி நாட்களில் சம்பவிப்பதை வெளிப்படுத்துகிறவரே
985. தானி. 2:44 – என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழுப்புகிறவரே
986. தானி. 3:17 – எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிற தேவனே
987. தானி. 3:17 – எரிகிற அக்கினிச் சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பவரே
988. தானி. 3:25-மூன்றுபேர் விடுதலைக்காய் அக்கினியின் நடுவில் உலாவியவரே
989. தானி. 3:25 – நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்ததே
990. தானி. 4:34- தலைமுறை தலைமுறையாக நிற்கும் ராஜ்யத்தை உடையவரே
991. தானி. 4:35 – வானத்தின் சேனையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறவரே
992. தானி. 6:20 – தானியேலை சிங்கங்களுக்குத் தப்புவித்த நல்லவரே
993. தானி. 6:22 – சிங்கத்தின் வாயைக் கட்டிப் போட்ட வல்லவரே
994. தானி. 6:26- ஜீவனுள்ளவராக என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவரே
995. தானி. 6:27 – அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவரே
996. தானி. 7:9 – உறைந்த மழையைப் போல வஸ்திரம் உடையவரே
997. தானி. 7:9 – சிங்காசனத்தில் நீண்ட ஆயுசுடன் வீற்றிருக்கிறவரே
998. தானி. 7:9 – அக்கினி ஜுவாலையுள்ள சிங்காசனத்தை உடையவரே
999. தானி. 7:10 -நியாயாசங்கத்தில் உட்கார்ந்து புஸ்தகங்களை திறக்கிறவரே
1000. தானி. 7:13 – வானத்து மேகங்களுடன் வருகிற மனுஷகுமாரனே
1001. தானி. 7:14 – அழியாத ராஜ்யத்தை உடைய வல்லவரே
1002. தானி. 9:14 – தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவரே
1003. தானி. 9:22 – எனக்கு அறிவை உணர்த்தும்படி தூதனை அனுப்பியவரே
1004. தானி. 9:23 – நீ மிகவும் பிரியமானவன் என்ற தேவனே
1005. தானி. 9:23 – வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளையிட்டவரே
1006. தானி. 10:5 – தங்கக் கச்சையைக் கட்டிக் கொண்டு இருக்கிறவரே
1007. தானி. 10:6 – ஜனத்தின் ஆரவாரத்தைப் போன்ற சத்தம் உடையவரே
1008. தானி. 10:6 – துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப் போன்றவரே
1009. தானி. 10:6 – படிகப்பச்சைப் போன்ற சரீரத்தை உடையவரே
1010. தானி. 10:6 – மின்னலின் பிரகாசத்தைப் போன்ற முகமுடையவரே
1011. தானி. 10:6 – எரிகிற தீபங்களைப் போன்ற கண்களை உடையவரே
1012. தானி. 10:19 -எனக்கு சமாதானம் உண்டாக என்னைத் திடப்படுத்தியவரே
1013. தானி. 12:3 – ஞானவானை ஆகாயமண்டலத்தில் ஒளியைப்போல் வைத்தவரே
1014. ஓசி. 5:15 – ஆபத்தில் என்னைக் கருத்தாய் தேடுங்கள் என்றவரே
1015. ஓசி. 6:3 – முன்மாரி, பின்மாரியைப் போல எங்களிடத்தில் வருபவரே
1016. ஓசி. 10:12 – எங்கள்மேல் நீதியை வருஷிக்கப் பண்ணுகிறவரே
1017. ஓசி. 11:4 – அன்பின் கயிறுகளால் எங்களைக் கட்டி இழுத்தவரே
1018. ஓசி. 11:4 -எங்கள் கழுத்தில் இருந்த நுகத்தடியை எடுத்துப் போட்டவரே
1019. ஓசி. 14:4 – உங்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன் என்றவரே
1020. ஓசி. 14:7 – தானிய விளைச்சலைப் போல செழிக்கச் செய்கிறவரே
1021. ஓசி. 14:7 – எங்களை திராட்சச் செடிகளைப் போல படரச் செய்கிறவரே
1022. ஓசி. 14:8 – பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறவரே
1023. யோவே. 2:26 – ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்கிறவரே
1024. யோவே. 2:28 – மாம்சமான யாவர்மேலும் தமது ஆவியை ஊற்றுகிறவரே
1025. யோவே. 3:21 – சியோனிலே வாசமாயிருக்கிற கர்த்தாவே
1026. ஆமோ. 4:13 – பர்வதங்களை உருவாக்கி காற்றை சிருஷ்டித்தவரே
1027. ஆமோ. 4:13 -பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களில் உலாவுகிறவரே
1028. ஆமோ. 4:13 – மனுஷனுடைய நினைவுகளை வெளிப்படுத்துகிறவரே
1029. ஆமோ. 5:8 – தண்ணீரைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவரே
1030. ஆமோ. 5:8 – அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவரே
1031. ஆமோ. 9:1 – பலிபீடத்தின் மேல் நிற்கிற ஆண்டவரே
1032. ஆமோ. 9:6 – வானத்தில் தமது மேலறைகளைக் கட்டியவரே
1033. ஆமோ. 9:6 – பூமியிலே தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தியவரே
1034. யோனா 1:9 – சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே
1035. யோனா 1:17- மீன் வயிற்றிலே யோனாவை மூன்றுநாள் பாதுகாத்தவரே
1036. யோனா 2:6 – யோனாவின் பிராணனை அழிவுக்கு தப்புவித்தவரே
1037. மீகா. 1:3 – தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிற கர்த்தாவே
1038. மீகா 2:7 – செம்மையாய் நடக்கிறவனுக்கு நன்மை செய்கிறவரே
1039. மீகா. 2:13 – தடைகளை நீக்கிப்போடுகிற வல்லவரே
1040. மீகா. 2:13 – எங்களுக்கு முன்பாக நடந்து போகிற கர்த்தாவே
1041. மீகா. 4:10 – என்னைச் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்கிறவரே
1042. மீகா. 5:4 – பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமையானவரே
1043. மீகா. 6:8 – மனத்தாழ்மையாய் நடப்பதை விரும்புகிறவரே
1044. மீகா. 7:8 – இருளிலே எனக்கு வெளிச்சமாயிருப்பவரே
1045. மீகா 7:9 – எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கிறவரே
1046. மீகா. 7:15 – என்னை அதிசயங்களைக் காணச் செய்கிறவரே
1047. நாகூ. 1:2 – நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே
1048. நாகூ. 1:3 – சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறவரே
1049. நாகூ. 1:3 – நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ள கர்த்தாவே
1050. நாகூ. 1:6 – கன்மலைகளை பேர்க்கிற வல்லவரே
1051. நாகூ. 1:7 – இக்கட்டு நாளிலே அரணான கோட்டையானவரே
1052. நாகூ. 1:13 – என் நுகத்தை முறித்து என் கட்டுகளை அறுப்பவரே
1053. ஆப. 1:13 – தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே
1054. ஆப. 3:4 – தமது கரத்திலிருந்து கிரணங்களை வீசுகிறவரே
1055. ஆப. 3:9 – பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்குகிறவரே
1056. ஆப. 3:11 – தமது ஈட்டியை மின்னல் பிரகாசத்தில் நடத்தினவரே
1057. ஆப. 3:13 – அபிஷேகித்தவனின் இரட்சிப்புக்காகப் புறப்பட்டு வந்தவரே
1058. ஆப. 3:18 – கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள் என்றவரே
1059. ஆப. 3:19 – என் கால்களை மான்கால்களைப் போலாக்கினவரே
1060. செப். 2:3 – நீதியையும் மனத்தாழ்மையையும் தேடுங்கள் என்றவரே
1061. செப். 3:15 – இனித்தீங்கைக் காணாதிருப்பாய் என்ற வல்லவரே
1062. செப். 3:15 – என் நடுவிலே இருக்கிற ராஜாவாகிய கர்த்தாவே
1063. செப். 3:17 – அன்பினால் என்பேரில் கம்பீரமாய் களிகூறுகிறவரே
1064. செப். 3:19 – எங்களைக் கீர்த்தியும், புகழ்ச்சியுமாக வைக்கிறவரே
1065. ஆகா. 2:19 – இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்றவரே
1066. ஆகா. 2:23 – என்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்றவரே
1067. சக. 2:10 – எங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுகிற கர்த்தாவே
1068. சக. 2:13 – தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளியவரே
1069. சக. 3:4 – எனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்த நல்லவரே
1070. சக. 3:9 – தேசத்தின் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப் போடுகிறவரே
1071. சக. 4:2 – பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்கை உடையவரே
1072. சக. 4:6 – எனது ஆவியினாலே ஆகும் என்ற சேனைகளின் கர்த்தாவே
1073. சக. 4:10 – ஏழு கண்களினால் பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிறவரே
1074. சக. 6:5 – சர்வ லோகத்துக்கும் ஆண்டவரே
1075. சக. 6:13 – சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்கிறவரே
1076. சக. 8:2 – சீயோனுக்காகக் கடும் வைராக்கியம் கொண்ட கர்த்தாவே
1077. சக. 8:3 – சீயோனிடத்தில் திரும்பி எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே
1078. சக. 8:8 – உண்மையும் நீதியுமான ஜனங்களுக்கு தேவனாயிருப்பவரே
1079. சக. 8:16 – அவனவன் பிறரோடே உண்மை பேசுங்கள் என்றவரே
1080. சக. 8:17 – விரோதமாய் இருதயத்தில் தீங்கு நினையாதே என்றவரே
1081. சக. 8:19 – சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்றவரே
1082. சக. 9:10 – ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரை செல்கிறவரே
1083. சக. 9:12 – இரட்டிப்பான நன்மையை இன்றைக்கே தருவேன் என்றவரே
1084. சக. 9:14 – தென்திசை சுழல் காற்றுகளோடே நடந்து வருகிறவரே
1085. சக. 9:14 – மின்னலைப் போலப் புறப்படும் அம்பு உடையவரே
1086. சகரி. 10:1 – மின்னல்களை உண்டாக்குகிறவரே
1087. சகரி. 10:1 – மழையைக் கட்டளையிடுகிறவரே
1088. சக. 12:1 – மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிறவரே
1089. சக. 12:10 – விண்ணப்பங்களில் கிருபையின் ஆவியை ஊற்றுகிறவரே
1090. சக. 14:9 – பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருக்கிற கர்த்தாவே
1091. மல். 1:11 – ஜாதிகளுக்குள்ளே மகத்துவமான நாமம் உடையவரே
1092. மல். 2:15 – பரிபூரண ஆவியை உடைய பரலோக தேவனே
1093. மல். 3:1 – ஆலயத்திற்கு தீவிரமாய் வருகிற சேனைகளின் கர்த்தாவே
1094. மல். 3:6 – நீங்கள் நிர்மூலமாவது இல்லை என்றவரே
1095. மல். 3:10 – வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வதிக்கிறவரே
1096. மல். 3:16 – தமக்குப் பயந்தவர்கள் பேசுகிறதை கவனித்துக் கேட்கிறவரே
1097. மல். 3:16 – ஞாபகப் புஸ்தகத்தை எழுதுகிற கர்த்தாவே
1098. மல். 4:2 – எங்கள்மேல் நீதியின் சூரியனை உதிக்கச் செய்கிறவரே
1099. மல். 4:2 – எங்களைக் கொழுத்த கன்றுகளைப் போல வளரச் செய்கிறவரே
1100. மத். 1:16 – கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவாகப் பிறந்தவரே
1101. மத். 1:21 – தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பவரே
1102. மத். 1:23 – இம்மானுவேல், எங்களோடு இருக்கிறவரே
1103. மத். 2:5 – யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறந்தவரே
1104. மத். 2:6 – இஸ்ரவேலை ஆளும் பிரபுவே
1105. மத். 3:11 – பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவரே
1106. மத். 3:11 – அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுப்பவரே
1107. மத். 3:16 – புறாவைப்போல இறங்கிய தேவ ஆவியானவரே
1108. மத். 3:17 – வானத்திலிருந்து என்னுடைய நேசகுமாரன் என்ற பிதாவே
1109. மத். 4:4 – மனிதன் தேவனுடைய வார்த்தையால் பிழைப்பான் என்றவரே
1110. மத். 4:17 – நீ மனந்திரும்பும் போது பரலோக ராஜ்யம் சமீபம் என்றவரே
1111. மத். 4:23 – சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கியவரே
1112. மத். 5:45 – தீயோர் நல்லோர் மேலும் சூரியனை உதிக்கச் செய்கிறவரே
1113. மத். 5:45 – நீதியுள்ளவர் அநீதியுள்ளவர் மேல் மழையைப் பொழிகிறவரே
1114. மத். 6:33 – தேவனுடைய ராஜ்யமும் நீதியையும் தேடுங்கள் என்றவரே
1115. மத். 7:21 – பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே
1116. மத். 7:25 – கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடுங்கள் என்றவரே
1117. மத். 9:6 – திமிர்வாதக்காரனை எழுந்து நடக்கச் செய்த வல்லவரே
1118. மத். 9:6 – நீ எழுந்து படுக்கையை எடுத்துக் கொண்டு போ என்றவரே
1119. மத். 9:13 – பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்றவரே
1120. மத். 9:13 – பாவிகளை மனந்திரும்புகிறதற்க்கு அழைக்க வந்தவரே
1121. மத். 10:20 – எங்களிலிருந்து பேசுகிற பிதாவின் ஆவியானவரே
1122. மத். 10:22 – முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனை இரட்சிப்பவரே
1123. மத். 11:5 – குருடரை பார்வையடையச் செய்கிறவரே
1124. மத். 11:5 – சப்பாணிகளை நடக்கச் செய்கிறவரே
1125. மத். 11:5 – குஷ்டரோகிகளை சுத்தமாகச் செய்கிற இயேசுவே
1126. மத். 11:5 – மரித்தோரை எழுந்திருக்கச் செய்கிற வல்லவரே
1127. மத். 11:29 – சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிற நல்லவரே
1128. மத். 13:37 – நல்ல விதையை விதைக்கிற மனுஷ குமாரனே
1129. மத். 13:43 – நீதிமான்களை சூரியனைப் போலப் பிரகாசிப்பிக்கிறவரே
1130. மத். 16:16 – ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவே
1131. மத். 16:19 – பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை எனக்குத் தருபவரே
1132. மத். 17:2 – வெளிச்சத்தைப் போல வஸ்திரம் வெண்மையானவரே
1133. மத். 17:2 – மறுரூபமானவரே
1134. மத். 17:5 – நேச குமாரன் மேல் பிரியமாயிருந்த பிதாவே
1135. மத். 18:11 – கெட்டுப்போன மனிதனை இரட்சிக்க வந்த மனுஷகுமாரனே
1136. மத். 19:19 – தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக என்றவரே
1137. மத். 20:19 – மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்தவரே
1138. மத். 21:4 – சாந்த குணமுள்ள ராஜாவே
1139. மத். 24:30 – வல்லமையோடு வானத்தின் மேகங்கள் மேல் வருகிறவரே
1140. மத். 25:6 – நடுராத்திரியிலே மணவாளனாய் வருகிறவரே
1141. மத். 25:10 – அவரோடே கலியாண வீட்டிற்கு அழைத்துச் செல்கிறவரே
1142. மத். 28:18 – வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் உடையவரே
1143. மத். 28:20 – சகல நாட்களிலும் எங்களுடனே கூட இருக்கிறவரே
1144. மாற். 1:22 – ஜனங்களுக்கு அதிகாரமுடையவராய் போதிக்கிறவரே
1145. மாற். 1:27 – அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்குக் கட்டளையிட்டவரே
1146. மாற். 1:34 – அநேகம் பிசாசுகளையும் துரத்தி சொஸ்தமாக்கியவரே
1147. மாற். 3:4 – என் ஜீவனைக் காப்பவரே
1148. மாற். 4:39 – கடலையும் காற்றையும் அதட்டி இரையாதே என்றவரே
1149. மாற். 5:39 – பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்றவரே
1150. மாற். 6:2 – பலத்த செய்கைகளை நடப்பிக்கும் ஞானம் உள்ளவரே
1151. மாற். 6:48 – நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்தவரே
1152. மாற். 7:35 – செவிகளைத் திறந்து நாவின் கட்டுகளை அவிழ்த்தவரே
1153. மாற். 8:38 – பரிசுத்த தூதர்களோடுங் கூட வருபவரே
1154. மாற். 8:38 – மகிமை பொருந்திய பிதாவின் குமாரனே
1155. மாற். 10:52 – குருடனை உடனே பார்வையடையச் செய்தவரே
1156. மாற். 11:17 – என்னுடைய வீடு எல்லோருக்கும் ஜெபவீடு என்றவரே
1157. மாற்.12:10 – தள்ளின கல்லை மூலைக்கு தலைக்கல்லாக மாற்றியவரே
1158. மாற். 12:27 – ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிற இயேசுவே
1159. மாற். 13:31 – என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்றவரே
1160. மாற். 14:24 – புது உடன்படிக்கை இரத்தத்தை அநேகருக்காக சிந்தினவரே
1161. மாற். 14:28 – உயிர்த்தெழுந்து கலிலேயாவுக்குப் போனவரே
1162. மாற். 14:36 – அப்பா பிதாவே
1163. மாற். 14:62 – பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மனுஷ குமாரனே
1164. லூக். 1:32 – பெரியவராயிருக்கிற இயேசுவே
1165. லூக். 1:35 – பரிசுத்தமுள்ள தேவனுடைய குமாரனே
1166. லூக். 1:37 – தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றவரே
1167. லூக். 1:42 – என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிப்பவரே
1168. லூக். 2:14 – பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமுமானவரே
1169. லூக். 2:30 – புற ஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியே
1170. லூக். 2:30 – இஸ்ரவேல் ஜனத்தின் மகிமையே
1171. லூக். 2:34 – அநேகருடைய இருதய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறவரே
1172. லூக். 2:40 – ஞானத்தினால் நிறைந்து கிருபையிலே வளர்ந்த இயேசுவே
1173. லூக். 3:6 – மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறவரே
1174. லூக். 4:18 – இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறவரே
1175. லூக். 4:18 – சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறவரே
1176. லூக். 4:34 – நசரேயனாகிய இயேசு நீர் தேவனுடைய பரிசுத்தரே
1177. லூக். 4:36 – வல்லமையோடு அசுத்த ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறவரே
1178. லூக். 5:17 – பிணியாளிகளை குணமாக்குகிற வல்லமையுள்ள தேவனே
1179. லூக். 6:19 – தமது வல்லமையால் எல்லாரையும் குணமாக்குகிற இயேசுவே
1180. லூக். 6:36 – இரக்கம் உள்ளவராயிருக்கிற பிதாவே
1181. லூக். 7:13 – என் மேல் மனதுருகி அழாதே என்ற இயேசுவே
1182. லூக். 7:14 – பாடையைத் தொட்டு வாலிபனே எழுந்திரு என்றவரே
1183. லூக். 7:22 – செவிடர்களைக் கேட்கச் செய்கிறவரே
1184. லூக். 7:47 – அநேக பாவங்களை மன்னிக்கிறவரே
1185. லூக். 8:44 – வஸ்திரத்தின் ஓரத்திலிருந்து வல்லமைப் புறப்படச் செய்தவரே
1186. லூக். 11:20 – தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறவரே
1187. லூக். 11:34 – கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்றவரே
1188. லூக். 12:12 – எங்களுக்குப் போதிக்கிற பரிசுத்த ஆவியே
1189. லூக். 13:11,13 – நிமிரக்கூடாத கூனியை கையைவைத்து நிமிர்த்தியவரே
1190. லூக். 14:11 – தன்னைத்தான் தாழ்த்துகிறவனை உயர்த்துகிறவரே
1191. லூக். 16:15 – எங்கள் இருதயங்களை அறிந்திருக்கிற ஆவியானவரே
1192. லூக். 18:13 – பாவியாகிய என்மேல் கிருபையாயிருக்கிற தேவனே
1193. லூக். 18:37 – தாவீதின் குமாரனே
1194. லூக். 19:38 – கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜாவே
1195. லூக். 21:26 – வானத்தின் சத்துவங்களை அசைக்கிற வல்லவரே
1196. லூக். 21:36 – எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றவரே
1197. லூக். 23:34 – பிதாவே இவர்களை மன்னியும் என்று மன்னித்தவரே
1198. லூக். 23:38 – யூதருடைய ராஜாவே
1199. லூக். 23:47 – இயேசுவே நீதிபரரே
1200. லூக். 24:23 – உயிரோடிருக்கிறவரே
1201. லூக். 24:49 – என்னை உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கிறவரே
1202. யோவா. 1:9 – எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே
1203. யோவா. 1:14 – எங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறவரே
1204. யோவா. 1:29 – பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே
1205. யோவா. 1:30 – மேன்மையுள்ள இயேசுவே
1206. யோவா. 2:9 – தண்ணீரை ருசியுள்ள திராட்ச ரசமாய் மாற்றியவரே
1207. யோவா. 3:13 – பரலோகத்திலிருந்து இறங்கியவரே
1208. யோவா. 3:16 – ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பிய பிதாவே
1209. யோவா. 3:31 – உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவரே
1210. யோவா. 4:10 – எனக்கு ஜீவத்தண்ணீரைத் தருகிறவரே
1211. யோவா. 4:14 – நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றே
1212. யோவா. 4:24 – ஆவியாயிருக்கிற தேவனே
1213. யோவா. 4:42 – கிறிஸ்துவாகிய உலக இரட்சகரே
1214. யோவா. 5:21 – மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிற பிதாவே
1215. யோவா. 6:57 – ஜீவனுள்ள பிதாவே
1216. யோவா. 6:58 – வானத்திலிருந்து இறங்கின அப்பமே
1217. யோவா. 6:63 – ஆவியும் ஜீவனும் உள்ள வசனங்கள் தந்தவரே
1218. யோவா. 6:68 – நித்திய ஜீவ வசனங்கள் உள்ளவரே
1219. யோவா. 8:12 – உலகத்திற்கு ஒளியாயிருக்கிற ஜீவ ஒளியே
1220. யோவா. 8:23 – உயர்விலிருந்து உண்டானவரே
1221. யோவா. 8:29 – பிதாவுக்குப் பிரியமானதை எப்பொழுதும் செய்கிற இயேசுவே
1222. யோவா. 8:32 – சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றவரே
1223. யோவா. 10:10 – ஜீவன் உண்டாயிருக்கவும் பரிபூரணப்படவும் வந்தவரே
1224. யோவா. 10:11 – நல்ல மேய்ப்பரே
1225. யோவா. 10:23 – தேவாலயத்திலே உலாவிக் கொண்டிருக்கிற இயேசுவே
1226. யோவா. 10:29 – எல்லாரிலும் பெரியவராய் இருக்கிற பிதாவே
1227. யோவா. 10:30 – நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்ற இயேசுவே
1228. யோவா. 11:25 – உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற இயேசுவே
1229. யோவா. 11:25 – என்னைவிசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றவரே
1230. யோவா. 11:40 – விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய் என்றவரே
1231. யோவா. 11:43 – லாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிட்டவரே
1232. யோவா.11:44 – மரித்த லாசரை உயிரோடு வெளியேகொண்டு வந்தவரே
1233. யோவா. 12:47 – உலகத்தை இரட்சிக்க வந்தவரே
1234. யோவா. 13:34 – ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்றவரே
1235. யோவா. 14:6 – வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற இயேசுவே
1236. யோவா. 14:26 – பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே
1237. யோவா. 14:27 – சமாதானத்தை எங்களுக்கு வைத்துச் சென்றவரே
1238. யோவா. 15:3 – உபதேசத்தினாலே எங்களைச் சுத்தமாக்குகிறவரே
1239. யோவா. 15:5 – நிலைத்திருப்பவனுக்கு மிகுந்த கனிகளைக் கொடுப்பவரே
1240. யோவா. 15:10 – என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் என்றவரே
1241. யோவா. 15:26 – தேற்றரவாளனாக வரும் சத்திய ஆவியானவரே
1242. யோவா. 16:20 – உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்றவரே
1243. யோவா. 16:28 – பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்தில் வந்தவரே
1244. யோவா. 17:11 – பரிசுத்த பிதாவே
1245. யோவா. 17:25 – நீதியுள்ள பிதாவே
1246. யோவா. 18:37 – சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க பிறந்தவரே
1247. யோவா. 18:37 – நான் ராஜாதான் என்ற இயேசுவே
1248. யோவா. 20:22 – பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றவரே
1249. யோவா. 21:17 – எல்லாவற்றையும் அறிந்திருக்கிற இயேசுவே
1250. அப். 1:3 – தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தவரே
1251. அப். 1:8 – பரிசுத்த ஆவி வரும்போது பெலனடைவீர்கள் என்றவரே
1252. அப். 2:38 – ஞானஸ்நானத்தினால் பரிசுத்த ஆவியின் வரத்தைத் தருகிறவரே
1253. அப். 3:6 – உமது நாமத்தினாலே முடவனை நடக்கச் செய்தவரே
1254. அப். 3:14 – பரிசுத்தரும் நீதியுமுள்ள தேவனே
1255. அப். 3:15 – ஜீவாதிபதியே
1256. அப். 5:15 – பேதுரு நிழலிலும் பிணியாளிகளைக் குணமாக்கியவரே
1257. அப். 5:20 – ஜீவ வார்த்தைகள் தந்தவரே
1258. அப். 7:50 – எல்லாவற்றையும் உமது கரத்தினால் உண்டாக்கியவரே
1259. அப். 7:56 – தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிற மனுஷகுமாரனே
1260. அப். 8:7 -அநேக திமிர்வாதக்காரர், சப்பாணிகளையும் குணமாக்கியவரே
1261. அப். 9:3 – வானத்திலிருந்து ஒளியாக சவுலைச் சுற்றி பிரகாசித்தவரே
1262. அப். 10:36 – சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறிய இயேசுவே
1263. அப். 10:38 – பிசாசின் வல்லமையில் அகப்பட்டவரை குணமாக்கியவரே
1264. அப். 11:18 – ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை அருளியவரே
1265. அப். 13:24 – மனந்திரும்புதலுக்கு என்று ஞானஸ்நானத்தைத் தந்தவரே
1266. அப். 16:26 – சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அசைத்தவரே
1267. அப். 17:25 – நமக்கு ஜீவனையும், சுவாசத்தையும் சகலத்தையும் தந்தவரே
1268. அப். 17:26 – சகல மனுஷனையும் ஒரே இரத்தத்திலே தோற்றுவித்தவரே
1269. அப். 22:6 – சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாக்கியவரே
1270. அப். 22:17 – ஜெபத்தில் ஞான திருஷ்டி அடையச் செய்கிறவரே
1271. அப். 26:13 – சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளியே
1272. அப். 26:16 – பவுலுக்குத் தரிசனமான தேவனே
1273. அப். 27:22 – கப்பலில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றவரே
1274. அப். 27:34 – உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றவரே
1275. அப். 27:44 – கடலில் எல்லாரையும் தப்புவித்துக் காப்பாற்றியவரே
1276. ரோம. 1:5 – மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரே
1277. ரோம. 1:5 – மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரே
1278. ரோம. 2:11 – பட்சபாதமில்லாத தேவனே
1279. ரோம. 4:17 – மரித்தோரை உயிர்ப்பித்த கர்த்தாவே
1280. ரோம. 5:5 – பரிசுத்த தேவ அன்பை எங்கள் இருதயங்களில் ஊற்றியவரே
1281. ரோம. 5:9 – அநேகரை இரத்தத்தினாலே நீதிமானாக மாற்றியவரே
1282. ரோம. 5:10 – உமது ஜீவனாலே என்னை இரட்சித்தவரே
1283. ரோம. 6:5 – எங்களை உயிர்த்தெழுதலின் சாயலினால் இணைத்தவரே
1284. ரோம. 6:22 – எங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கியவரே
1285. ரோம. 6:23 – கிருபை வரமாகிய நித்திய ஜீவனைத் தந்த கர்த்தாவே
1286. ரோம. 8:9 – தேவனுடைய ஆவி எங்களில் வாசமாயிருப்பவரே
1287. ரோம. 8:15 -அப்பா பிதாவே, புத்திர சுவிகாரத்தின் ஆவியைத் தந்தவரே
1288. ரோம. 8:26 – பெருமூச்சுகளோடு, எனக்காக வேண்டுதல் செய்கிறவரே
1289. ரோம. 10:4 – நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிற கிறிஸ்துவே
1290. ரோம. 11:15 – மரித்தோரிலிருந்து ஜீவனை உண்டாக்குகிறவரே
1291. ரோம. 11:33 – ஞானம், அறிவுமாகிய ஐசுவரியத்தைத் தருகிறவரே
1292. ரோம. 12:2 – எங்கள் மனம் புதிதாக்கி மறுரூபமாக்குகிறவரே
1293. ரோம. 12:11 – ஆவியிலே அனலாயிருங்கள் என்றவரே
1294. ரோம. 12:12 – உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் என்றவரே
1295. ரோம. 12:12 – நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள் என்றவரே
1296. ரோம. 12:14 – துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்றவரே
1297. ரோம. 12:21 – தீமையை நன்மையினாலே வெல்லுங்கள் என்றவரே
1298. ரோம. 14:17 – சமாதானமும் சந்தோஷமுமான ராஜ்யத்தை உடையவரே
1299. 1 கொரி. 1:24 – தேவபெலனும், தேவஞானமுமாயிருக்கிற தேவனே
1300. 1 கொரி. 1:31 – ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமான நல்லவரே
1301. 1 கொரி. 2:12 – தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியை எனக்குத் தந்தவரே
1302. 1 கொரி. 3:16 – எங்களில் வாசமாயிருக்கிற தேவ ஆவியானவரே
1303. 1 கொரி. 4:20 – தேவ பெலத்திலே உண்டான ராஜ்யத்தை உடையவரே
1304. 1 கொரி. 6:19 – ஆலயமாக எங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்தாவியே
1305. 1 கொரி. 15:6 – ஐந்நூறு பேருக்கு ஒரே வேளையிலே தரிசனமானவரே
1306. 1 கொரி. 15:44 – ஆவிக்குரிய சரீரத்தை எழுப்புகிறவரே
1307. 1 கொரி. 15:51- ஒரு இமைப்பொழுதிலே எங்களை மறுரூபமாக்குபவரே
1308. 2 கொரி. 2:16 – ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும் இருப்பவரே
1309. 2 கொரி. 3:17 – உமது ஆவியால் எங்களுக்கு விடுதலை தருகிறவரே
1310. 2கொரி. 3:18 – மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாக்குகிறவரே
1311. 2 கொரி. 4:6 – மகிமையின் அறிவாகிய ஒளியான பிதாவே
1312. 2 கொரி. 5:1 – பரலோகத்திலே எனக்கு நித்திய வீடு உண்டாக்கியவரே
1313. 2 கொரி. 5:17 – கிறிஸ்துவுக்குள் என்னை புதுச்சிருஷ்டியாக்கியவரே
1314. 2 கொரி. 6:16 – எங்களுக்குள்ளே வாசம் பண்ணி உலாவுகிறவரே
1315. 2 கொரி. 12:9 – பலவீனத்தில் என் கிருபை உனக்குப் போதும் என்றவரே
1316. கலா. 1:3 – கிருபையும் சமாதானமும் தருகிற பிதாவாகிய தேவனே
1317. கலா. 2:20 – எனக்குள் ஜீவித்திருக்கிற குமாரனாகிய கிறிஸ்துவே
1318. எபே. 1:3 -ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதிக்கிறவரே
1319. எபே. 1:4 – உலகத்தோற்றத்துக்கு முன்னே என்னைத் தெரிந்தவரே
1320. எபே. 1:8 – சகல ஞானத்தோடும்; கிருபையை பெருகச் செய்கிறவரே
1321. எபே. 1:19 – பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கிறவரே
1322. எபே. 2:6 – கிருபையின் மகாமேன்மையான ஐசுவரியத்தைத் தருபவரே
1323. எபே. 4:10 – எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறியவரே
1324. எபே. 5:9 – நீதி, உண்மை, சகல நற்குணத்தில் ஆவியின் கனியைத் தந்தவரே
1325. எபே. 5:26 – தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்கியவரே
1326. எபே. 6:17 – தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தைத் தந்தவரே
1327. பிலி. 1:10 – எங்களை நீதியின் கனிகளால் நிறைத்த கிறிஸ்துவே
1328. பிலி. 2:8 – சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தினவரே
1329. பிலி. 2:9 – குமாரனை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தியவரே
1330. பிலி. 2:14 – ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு பிரகாசியுங்கள் என்றவரே
1331. பிலி. 3:21 – அற்பமான சரீரத்தை மகிமையான சரீரமாக மாற்றுபவரே
1332. பிலி. 4:7 – மேலான தேவ சமாதானத்தை என் இருதயத்தில் வைத்தவரே
1333. பிலி. 4:13 – என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவே
1334. கொலோ. 1:18 – சபையாகிய சரீரத்துக்குத் தலைவரான பிதாவே
1335. கொலோ. 1:18 – எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கிறவரே
1336. கொலோ.1:20 – சிலுவை இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கியவரே
1337. கொலோ. 3:4 – எங்களுடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்பட்டாரே
1338. கொலோ. 3:12 – நீடிய பொறுமையை தரித்துக் கொள்ளுங்கள் என்றவரே
1339. கொலோ. 3:14 – பூரண சற்குணத்தின் அன்பைத் தரித்துகொள் என்றவரே
1340. 1 தெச. 5:23 – எங்களை குற்றமற்றவர்களாக பரிசுத்த மாக்குகிறவரே
1341. 2 தெச. 1:8 – ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும் வெளிப்படுகிறவரே
1342. 1 தீமோ. 3:15 – சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமான ஜீவனுள்ள தேவனே
1343. 1 தீமோ. 3:16 – ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டவரே
1344. 1 தீமோ. 3:16 – புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப் பட்டவரே
1345. 1 தீமோ. 6:15 – நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியாகிய பிதாவே
1346. 1தீமோ. 6:16 – ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரே
1347. 1தீமோ. 6:16 – மனுஷரில் ஒருவரும் காணக் கூடாதவருமா யிருக்கிறவரே
1348. 1தீமோ. 6:17 – நன்மைகளை சம்பூரணமாய் கொடுக்கிற ஜீவனுள்ள தேவனே
1349. 2 தீமோ. 1:7 – தெளிந்த புத்தியுள்ள ஆவியை எனக்குத் தருகிறவரே
1350. 2 தீமோ. 2:19 – நிலைத்திருக்கும் உறுதியான அஸ்திபாரத்தின் கர்த்தாவே
1351. 2 தீமோ. 3:16 – தேவ ஆவியினாலே வேதவாக்கியம் அருளியவரே
1352. 2 தீமோ. 4:8 – எனக்கு நீதியின் கிரீடம் வைத்திருக்கிறவரே
1353. தீத். 2:14 – என்னைச் சுத்திகரிக்க தம்மை ஒப்புக்கொடுத்தவரே
1354. தீத். 3:7 – சம்பூரணமாய் பரிசுத்த ஆவியை நம்மேல் பொழிகிறவரே
1355. எபி. 1:2 – குமாரனை சர்வத்துக்கும் சுதந்தரவாளி ஆக்கிய பிதாவே
1356. எபி. 1:2- குமாரனைக் கொண்டு உலகங்களை உண்டாக்கியவரே
1357. எபி. 1:3 – சர்வத்தையும் தமது வல்லமையினால் தாங்குகிறவரே
1358. எபி. 1:8 – நீதியுள்ள செங்கோலாய் ராஜ்யத்தை ஆளுகிறவரே
1359. எபி. 1:11,12 – நீரோ நிலைத்திருப்பீர், நீரோ மாறாதவரே
1360. எபி. 2:9 – மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டப்பட்டவரே
1361. எபி. 2:14 – பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்தவரே
1362. எபி. 2:18 – சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவி செய்கிற வல்லவரே
1363. எபி. 4:12 – இருதய நினைவின் யோசனைகளை வகையறுக்கிறவரே
1364. எபி. 4:12 – ஜீவனும் வல்லமையுமான வார்த்தையை உடையவரே
1365. எபி. 4:14 – வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்கு ஏறிப் போனவரே
1366. எபி. 4:14 – தேவ குமாரனாகிய மகா பிரதான ஆசாரியரான இயேசுவே
1367. எபி. 5:6 – மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவரே
1368. எபி. 5:10 – பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரித்தவரே
1369. எபி. 6:14 – என்னை ஆசீர்வதித்து பெருகவே பெருகப் பண்ணுகிறவரே
1370. எபி. 7:3 – ஜீவனின் முடிவு இல்லாதவரே
1371. எபி. 7:14 – யூதா கோத்திரத்தில் தோன்றிய இயேசுவே
1372. எபி. 7:17 – அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின் படியான ஆசாரியரே
1373. எபி. 7:20 – மனம் மாறாமல் இருப்பவரே
1374. எபி. 7:26 – வானங்களில் உயர்ந்தவராயிருக்கிற பிரதான ஆசாரியரே
1375. எபி. 8:10 – தமது பிரமாணங்களை எங்கள் இருதயங்களில் எழுதுகிறவரே
1376. எபி. 8:12 – என் பாவங்களை, அக்கிரமங்களை நினைக்காமல் இருப்பவரே
1377. எபி. 9:12 – ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்தவரே
1378. எபி. 9:14 – பழுதற்ற பலியாக இரத்தத்தை ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவே
1379. எபி. 9:22 – உமது இரத்தத்தினாலே என்னை சுத்திகரித்தவரே
1380. எபி. 9:28 – அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்த்த இயேசுவே
1381. எபி. 10:10 – சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டு எங்களைப் பரிசுத்தமாக்கியவரே
1382. எபி. 10:12 – எங்கள் பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தியவரே
1383. எபி. 10:12 – தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்த இயேசுவே
1384. எபி. 10:19 – புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உடையவரே
1385. எபி. 10:20 – இரத்தத்தினாலே எங்களுக்குத் தைரியம் தந்த இயேசுவே
1386. எபி. 10:38 – விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றவரே
1387. எபி. 11:3 – வார்த்தையினால் உலகங்களை உண்டாக்கியவரே
1388. எபி. 11:29 – சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையாக்கியவரே
1389. எபி. 11:30 – எரிகோ பட்டணத்தின் மதில்கள் விழுந்துபோகச் செய்தவரே
1390. எபி.11:33 – சிங்கங்களின் வாய்களை அடைத்தவரே
1391. எபி. 11:34 – அந்நியருடைய சேனைகளை முறியடித்தவரே
1392. எபி. 12:23 – பரலோகத்தின் சர்வசங்கமாகிய சபையை உருவாக்கியவரே
1393. எபி. 12:24 – புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவே
1394. எபி. 12:28 – அசைவில்லாத ராஜ்யத்தைப் பெற கிருபை தருகிறவரே
1395. எபி. 13:9 – இருதயத்தை கிருபையினாலே ஸ்திரப்படுத்துகிற கர்த்தாவே
1396. எபி. 13:15 – எப்போதும் ஸ்தோத்திர பலியை செலுத்துங்கள் என்றவரே
1397. யாக். 1:5 – ஞானத்தை யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுப்பவரே
1398. யாக். 1:17 – பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து அனுப்புகிறவரே
1399. யாக். 2:5 – தரித்திரரை ஐசுவரியவானாக மாற்றுகிற வல்லவரே
1400. யாக். 2:8 -அன்பு கூருவாயாக என்ற ராஜரீக பிரமாணத்தைத் தந்தவரே
1401. யாக். 3:2 – சொல் தவறாதவனை; பூரண புருஷன் என்றவரே
1402. யாக். 3:17 – பரத்திலிருந்து சுத்தமுள்ள ஞானத்தைத் தருகிறவரே
1403. யாக். 5:15 – விசுவாசமுள்ள ஜெபத்தினால் பிணியாளியை எழுப்புகிறவரே
1404. 1 பேது. 1:12 – பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியே
1405. 1 பேது. 1:17 – பட்சபாதமில்லாமல் நியாயம் தீர்க்கிறவரே
1406. 1 பேது. 1:19 – விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே எங்களை மீட்டவரே
1407. 1 பேது. 2:3 – திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலே
1408. 1 பேது. 2:6 – விலையேறப்பெற்ற மூலைக்கல்லை சீயோனில் வைத்தவரே
1409. 1பேது. 2:9 – எங்களை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவரே
1410. 1 பேது. 2:9 – பரிசுத்த ஜாதியாயும், சொந்தமான ஜனமாயும் தெரிந்தவரே
1411. 1 பேது. 2:9 – ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாக தெரிந்தவரே
1412. 1 பேது. 2:24 – உமது தழும்புகளால் குணமாக்கிய இயேசுவே
1413. 1 பேது. 2:24 – எங்களுடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தவரே
1414. 1பேது. 3:21 – தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சி ஞானஸ்நானம் என்றவரே
1415. 1பேது. 4:14- எங்கள்மேல் தங்கியிருக்கிற மகிமையுள்ள ஆவியானவரே
1416. 1 பேது. 5:5 – தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறவரே
1417. 1 பேது. 5:5 – மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் என்றவரே
1418. 1 பேது. 5:7 – எங்களை விசாரிக்கிற கர்த்தாவே
1419. 2 பேது. 1:2 – எனக்குக் கிருபையும் சமாதானமும் பெருக செய்கிறவரே
1420. 2 பேது. 1:17 – கனத்தையும் மகிமையையும் பெற்ற நேசகுமாரனே
1421. 2 பேது. 1:19 – எங்கள் இருதயங்களில் உதிக்கும் விடிவெள்ளியே
1422. 1 யோவா. 1:7 – தமது இரத்தத்தால் சகல பாவங்களையும் நீக்கியவரே
1423. 1 யோவா. 2:1 – பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிற இயேசுகிறிஸ்துவே
1424. 1 யோவா. 2:2 – பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியே
1425. 1 யோவா. 2:20 – அபிஷேகத்தால் சகலத்தையும் அறியச் செய்தவரே
1426. 1 யோவா. 2:25 – நித்திய ஜீவனை அளிப்பேன் என்றவரே
1427. 1 யோவா. 3:5 – எங்கள் பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டவரே
1428. 1 யோவா. 3:8 – பிசாசினுடைய கிரியைகளை அழிக்க வெளிப்பட்டவரே
1429. 1 யோவா. 4:9 – ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பிய பிதாவே
1430. 1 யோவா. 4:10 – குமாரனை அனுப்பி என்மீது அன்பு கூர்ந்த பிதாவே
1431. 1 யோவா. 5:4 – தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் என்றவரே
1432. 1 யோவா. 5:11 – நித்திய ஜீவனைத் தருகின்ற ஜீவன் உள்ள குமாரனே
1433. யூதா 20 – பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணுங்கள் என்றவரே
1434. யூதா 21 – நித்திய ஜீவனுக்கு இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் என்றவரே
1435. யூதா : 25 – ஞானமுள்ள ஒரே தேவனே
1436. வெளி. 1:5 – மரித்தோரிலிருந்து முதற்பிறந்த இயேசுவே
1437. வெளி. 1:5 – பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியான ராஜாவே
1438. வெளி. 1:6 – தமது இரத்தத்தினாலே எங்களை பாவங்களற கழுவியவரே
1439. வெளி. 1:8 – இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமான வல்லவரே
1440. வெளி. 1:11 – முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறவரே
1441. வெளி. 1:13 – மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனே
1442. வெளி. 1:14 – அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்கள் உடையவரே
1443. வெளி. 1:15- பெருவெள்ளத்து இரைச்சலைப் போன்ற சத்தமுடையவரே
1444. வெளி. 1:15 – உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான பாதம் உள்ளவரே
1445. வெளி. 1:16 – முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போன்றவரே
1446. வெளி. 1:18 – இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரே
1447. வெளி. 2:1 – ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவரே
1448. வெளி. 2:1 – தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்தியவரே
1449. வெளி. 2:7 – பரதீசின் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பவரே
1450. வெளி. 2:8 – மரித்திருந்து பிழைத்தவருமானவரே
1451. வெளி. 2:10 – ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் என்றவரே
1452. வெளி. 2:17 – ஜெயிக்கிறவனுக்கு மறைவான மன்னாவைத் தருபவரே
1453. வெளி. 2:18 – பிரகாசமான வெண்கலம் போன்ற பாதம் உடையவரே
1454. வெளி. 3:5 – ஜெயங்கொள்ளுகிறவனுக்கு வெண் வஸ்திரம் தருபவரே
1455. வெளி. 3:7 – ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரே
1456. வெளி. 3:7 – ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவரே
1457. வெளி. 3:8 – எனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறவரே
1458. வெளி. 3:12 – என்னை தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குகிறவரே
1459. வெளி. 3:12 – புதிய நாமத்தை என்மேல் எழுதுகிற தேவனே
1460. வெளி. 4:2 – வானத்தில் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவரே
1461. வெளி. 4:3 – வச்சிரக் கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருக்கிறவரே
1462. வெளி. 4:3 – சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லை உருவாக்கியவரே
1463. வெளி. 4:3 – சிங்காசனம் பார்வைக்கு மரகதம் போல் தோன்றச் செய்தவரே
1464. வெளி. 4:5 – மின்னல்களும் இடி முழக்கங்களும் புறப்படச் செய்தவரே
1465. வெளி. 4:6 – பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலை உடையவரே
1466. வெளி. 4:11 – நீரே சகலத்தையும் சிருஷ்டித்தவரே
1467. வெளி. 5:5 – நீ அழவேண்டாம் என்றவரே
1468. வெளி. 5:5 – யூதா கோத்திரத்துச் சிங்கமே
1469. வெளி. 5:7 – புஸ்தகத்தை வாங்கிய ஆட்டுக் குட்டியானவரே
1470. வெளி. 6:1 – முத்திரையை உடைக்கப்போகும் ஆட்டுக்குட்டியானவரே
1471. வெளி. 7:3 – ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போடுகிறவரே
1472. வெளி. 7:9 – ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டம் உடையவரே
1473. வெளி. 7:10 -இரட்சிப்பின் மகிமையாய் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே
1474. வெளி. 7:17 – ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துகிறவரே
1475. வெளி. 7:17 – எங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கிறவரே
1476. வெளி. 9:13 – பொற்பீடத்தின் கொம்புகளில் சத்தத்தை தோற்றுவித்தவரே
1477. வெளி. 9:16 – இருபது கோடி இராணுவ குதிரைச் சேனையுடையவரே
1478. வெளி. 11:17 – மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுகிறவரே
1479. வெளி. 11:19 – பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டதற்காக
1480. வெளி. 14:7 – சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரே
1481. வெளி. 15:3 – பரிசுத்தவான்களின் ராஜாவே, நீதியும் சத்தியமுமானவரே
1482. வெளி. 15:3 – மகத்துவமும் ஆச்சரியமுமான கிரியைகள் செய்கிற வல்லவரே
1483. வெளி. 19:1 – மகிமையும் கனமும் வல்லமையும் உடைய கர்த்தாவே
1484. வெளி. 19:11 – நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவரே
1485. வெளி. 19:12 – உமது சிரசின் மேல் அநேகக் கிரீடங்களை உடையவரே
1486. வெளி. 19:13 – உமது நாமம் தேவனுடைய வார்த்தை என்ற இயேசுவே
1487. வெளி. 19:16 – ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா நாமம் உடையவரே
1488. வெளி. 21:1 – புதிய வானம், புதிய பூமியை யோவானுக்குக் காண்பித்தவரே
1489. வெளி. 21:3 – மனுஷர்களிடத்திலே வாசஸ்தலமாக வாசம் செய்கிறவரே
1490. வெளி. 21:4 – முந்தினவைகள் ஒழிந்து போயின என்ற நல்லவரே
1491. வெளி. 21:5 – இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றவரே
1492. வெளி. 21:6 – ஜீவத்தண்ணீரூற்றை இலவசமாய்த் தருகிறவரே
1493. வெளி. 21:21 – பரலோக நகரத்தின் வீதி சுத்தப்பொன்னாய் உருவாக்கியவரே
1494. வெளி. 21:23 – ஆலயத்தின் மகிமையின் விளக்காம் ஆட்டுக்குட்டியானவரே
1495. வெளி. 21:24 – இரட்சிக்கிற ஜனங்களை வெளிச்சத்திலே நடத்துகிறவரே
1496. வெளி. 22.2 – பன்னிரண்டுவித கனிகளைத்தரும் ஜீவவிருட்சத்தின் தேவனே
1497. வெளி. 22:3 – இனி ஒரு சாபமுமிராது என்ற தேவ ஆட்டுக்குட்டியே
1498. வெளி. 22:5 – எங்கள்மேல் பிரகாசிக்கிற தேவனாகிய கர்த்தாவே
1499. வெளி .22:13 – அல்பாவும், ஓமெகாவும், ஆதியும், அந்தமுமானவரே
1500. வெளி. 22:16 – பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமே

error: Content is protected !!
ADS
ADS
ADS