Aabiragaam Devan | ஆபிரகாம் தேவன்

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் – என்னை
அழைத்தவர் உன்னத வழியில்
என்றன்றும் நடத்திடுவார்

வனாந்திரமோ வாடாதே மனமே
காடியை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ – எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ – ஆபிரகாம்

சோதனை வேலையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானை கடந்து – இயேசுவை பற்றிக் கொள்
என்றன்றும் ஜீவிப்பாயே – ஆபிரகாம்

கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய் – ஆபிரகாம்

அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய் – ஆபிரகாம்

Close Menu
error: Content is protected !!