To Advertise Contact - christmusicindia@gmail.com

Aanandhamaay Naamae | ஆனந்தமாய் நாமே

Loading

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லா கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

பல்லவி
ஆத்துமாவே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் – ஆத்துமாவே

படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
கர்த்தரே அல்லேலூயா – ஆத்துமாவே

யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழுவோம் – ஆத்துமாவே

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதிசீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் – ஆத்துமாவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS