Aanandhamaay Nam Devanai | ஆனந்தமாய் நம் தேவனை

Loading

ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடித் துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

மகிமையும் வல்லமை
கனத்திற்கு பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே – ஆனந்தமாய்

ஒளிதரும் கண்களோ
சுடர்தரும் பாதங்கள்
பேரு வெல்ல இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் – ஆனந்தமாய்

ஜீவன்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுகுவோம்
ஆண்டவர் இவரை பணிந்திடுவோம் – ஆனந்தமாய்

ஆதியும் அந்தம் நீர்
ஞானத்தில் சிறந்தவர்
யூதாவின் சிங்கம் நீரே
துதிகளின் பாத்திரர்
துதிகளை சாற்றி பணிகுவோம்
ஸ்தோத்திரம் செலுத்தி தொழுதிடுவோம் – ஆனந்தமாய்

நன்மைகள் யாவையும்
அளித்திடும் தேவனாம்
உண்மையாய் நாமே என்றும்
விழிப்புடன் ஜீவித்து
மகிமையில் சேர்ந்து புகழ்ந்திட
மகிபனை நாமே துதித்திடுவோம் – ஆனந்தமாய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS