To Advertise Contact - christmusicindia@gmail.com

Aandavar Nam Iyesuvai | ஆண்டவர் நம் இயேசுவை

Loading

ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்துப் போற்றிட நாம் ஆயத்தமல்லோ
ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே

பல்லவி
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே

எண்ணில்லா என் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ
எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே
ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போம்

உன்னதமா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழ்வோம்
தீங்கு நாட்கள் தீவிரம் எம்முன் நெருங்கிற்றே

இயேசு என் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாராவாரம் எங்கும் தொனிக்க
அல்லேலூயா வல்லமையாய் பாடிடுவோமே

இடுக்கமான வழியே இன்பகானான் ஏசுவே
இன்னும் அவரோடு கோட்பாடு சகிப்போம்
என்றும் நம் இயேசுவோடு ஆட்சி செய்வோமே

எருசலேமே ஆர்ப்பரிசீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் வின் தூதருடனே
ஆத்ம மணவாளன் இயேசு தாம் வருகிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS