To Advertise Contact - christmusicindia@gmail.com

Aaravaaram | ஆரவாரம்

Loading

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்

நன்றி பாடல் தினமும் பாடுவோம்
நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்

கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்

கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்

உயிர்த்த கிறிஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்

ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்

துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்

நீதியின் சால்வை தந்து
இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார்

இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம்

மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
ஆவிதாங்கும் ஆலயமாய்
வளர்கின்ற கோபுரம் நாம்

விண்ணகமே நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS