Aaseervathiyum Karththare | ஆசீர்வதியும் கர்த்தரே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உத்தியும் சுத்தரே நித்தம் மகிழவே

பல்லவி
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா என் மணவாளனே
ஆசாரியராம் வான ராஜனே
ஆசீர்வதித்திடும்

இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடன் பாக்கிய சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க
ஊக்க மருளும்

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றருளும் நீர் ஏக ராஜனாம்
எற்றவான் ராயா சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே

பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மா திரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS