ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஓமெகாவும் ஆனவரே
அல்லேலூயா அல்லேலூயா (4)
இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – அல்லேலூயா
பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யெகோவா தேவனே நீர் வாழ்க – அல்லேலூயா
பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசுகிறிஸ்துவே நீர் வாழ்க – அல்லேலூயா
பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலி ஆனவரே – அல்லேலூயா
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – அல்லேலூயா
பரிசுத்த ஆவியே நீர் வாழ்க
தேற்றரவாளனே நீர் வாழ்க – அல்லேலூயா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – அல்லேலூயா
சீக்கிரமாக வருபவரே நீர்
சீயோனின் இராஜாவே நீர் வாழ்க – அல்லேலூயா
வல்லவரே இயேசு வல்லவரே
சகலத்தையும் செய்ய வல்லவரே – அல்லேலூயா
நல்லவரே இயேசு நல்லவரே
இஸ்ரவேலின் கர்த்தர் நல்லவரே – அல்லேலூயா