To Advertise Contact - christmusicindia@gmail.com

Aathiyum Neere Anthamum | ஆதியும் நீரே அந்தமும்

Loading

ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

தூதர்கள் போற்றும் தூயவரே
துதிகளின் பாத்திரர் தேவரீரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்

வல்லமை ஞானம் மிகுந்தவரே
வையகம் அனைத்தையும் காப்பவரே
ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் – ஆதியும்

செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் – ஆதியும்

ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தொன்றுமே
உத்தம தேவனை பணிந்திடுவோம் – ஆதியும்

ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளை
செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம் – ஆதியும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS