To Advertise Contact - christmusicindia@gmail.com

Aaththumame En Muzhu | ஆத்துமமே என் முழு

Loading

ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து; – இந்நாள் வரை
அன்பு வைத்தாதரித்த
ஆண்டவரைத் தொழுதேத்து

போற்றிடும் வானோர் – பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத் தருளும் மேலான – ஆத்துமமே

வாதை, நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த – ஆத்துமமே

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS