Aavi Analullathaay Aviyaamal | ஆவி அனலுள்ளதாய் அவியாமல்

ஆவி அனலுள்ளதாய்
அவியாமல் பாதுகாப்பாய்
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
ஜீவிப்பது பரிதாபம்

கர்த்தரின் நாள் மிக சமீபம்
கருத்துடன் ஜீவிப்பாயே
நிர்ப்பந்த நாட்கள் வரும்
நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே

வருகையின் அடையாளங்கள்
வெகு விரைவாக நிறைவேறுதே
வானத்தின் அதிசயங்கள்
காலம் கூறுதே கண்டிடுவாய்

அசதியாய் இருந்திடாமல்
பின்னும் அதிசயங்கள் செய்வோமே
ஜெபத்திலே தரித்திடுவோம்
ஜெய ஊழியம் செய்திடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS