ஆவியானவரே (2) பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே (2) அபிஷேகம் இன்று தாருமே
பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே
ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே
நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி வேண்டுமே
பெரும்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்கும் இடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே
வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்குகள் வேண்டுமே
கள்ளம் கபடு மாற வேண்டுமே
உள்ளத்தில் தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே
உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமே
வாழ்வில் மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே
கட்டுகள் அகன்று போக வேண்டுமே
கண்ணிகள் தெறித்துப்போக வேண்டுமே
கர்த்தர் நாமம் உயர்ந்திட வேண்டுமே
கண்ணீர் யாவும் துடைக்கப்பட வேண்டுமே – ஆவியானவரே