Aayiram Aayiram Kaanangalaal | ஆயிரம் ஆயிரம் கானங்களால்

Loading

ஆயிரம் ஆயிரம் கானங்களால்
அதிசயமானவரைத் துதிப்பேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் – நான்

நல்லவர் இயேசு நல்லவர் – அவர்
என்றென்றும் போதுமானவர்
நாடோறும் பாரங்கள் அகற்றிடுவார்
நன்றியால் துதித்திடுவேன்

வானதூத சேனைகளால் போற்றப்படும் பரிசுத்தரே
வானமகிமையை விட்டு மானிடனாய் பிறந்தவரே
வானிலும் பூவிலும் எந்தன் வாஞ்சை உந்தன் நாமமல்லோ
வாழ்த்திடுவேன், வணங்குவேன், துதித்திடுவேன்

இஸ்ரவேலின் துதிகள் வாசம் செய்யும் தூயதேவனே
இரட்சகராய் எகிப்தில் தம் ஜனத்தை மீட்டுக்கொண்டீரே
செங்கடலோ, சேனைகளோ நேரிடினும் பயமில்லை
சந்தோஷமாய் உம்மை என்றும் துதித்திடுவேன்

ஆழ்கடலின் அலைகள் போல் சோதனைகள் பெருகிடினும்
அக்கினியால் என் விசுவாசம் சோதிக்கப்படும் வேளையிலும்
தாங்கியென்னைக் கரங்களில் தாய் நடத்தும்போல் அணைத்து
தெற்றிடும் கிருபைகட்காய் துதித்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS