Aayiram Naavugal Pothaa | ஆயிரம் நாவுகள் போதா

ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவர் உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தர் உம்மைப் போற்றி பாட

காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றி பாட – ஆயிரம்

அலை மோதியோடும் படகாய்
அலைந்த என்னை அன்பால் மீட்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்தும் உம் அன்பால் – ஆயிரம்

அன்பாக என்னை அழைத்தீர்
கனமான சேவையை தந்தீர்
ஆயுள் முழுவதும் துதிகள்
ஆயிரமாய் சொல்லி வாழ்வேன் – ஆயிரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS