To Advertise Contact - christmusicindia@gmail.com

Aayiram Sthoththirame | ஆயிரம் ஸ்தோத்திரமே

Loading

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

வாலிப நாட்களிலே
என்னை படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

உலகமேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் நோவுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

இயேசுவின் நாமத்திலே
ஜெயங்கோடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS