அந்தகார வல்லமைகளை
சுட்டெரிக்கும் அபிஷேகம்
எந்தன் மேலே இறங்கிடுதே
எந்த நாளும் நடத்திடுமே
அந்தகார வல்லமைகளை
தர்த்தெரியும் அபிஷேகம்
எந்தன் மேலே இறங்கிடுதே
இந்த நாளும் நடத்திடுதே
அபிஷேகம் இந்த நாளில் ஊற்றுமே
மழையாய் ஊற்றிடுமே
அபிஷேகம் என் மேல் ஊற்றிடுமே
உம் ஆவியால் நிரப்பிடுமே-அந்தகார
முன்மாரி அபிஷேகம்-இன்று
பின்மாரியாய் ஊற்றிடுதே
மாம்சமான யாவரையும்
இந்த நாளில் நிரப்பிடுதே-2-அபிஷேகம்
பெந்தேகோஸ்தே அபிஷேகம்
இப்பொழுதே இறங்கிடுதே
ஒருமனம் தருகின்றதே
இடமெல்லாம் அசைகின்றதே-2-அபிஷேகம்
வல்லமையின் அபிஷேகம்
அக்கினியாய் இறங்கிடுதே
தடைகளை உடைத்திடுதே
வழிகளை திறந்திடுதே-2-அபிஷேகம்