To Advertise Contact - christmusicindia@gmail.com

Adaikkalamae Umathadimai | அடைக்கலமே உமதடிமை

Loading

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிபேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்வமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே – ஆ

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ

கரம்பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குனமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே – ஆ

பாவங்களை பாரதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்க செய்தீரே – ஆ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS