என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய..
விவரிக்க முடியாத கிருபைய.. (2)
அதுதான் கிருபை… அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே..
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் (2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே..
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே (2)
2. திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் அதிகம் செய்ததே..
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே..
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய..
விவரிக்க முடியாத கிருபைய..
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே..
எனக்கது இலவசமானதே..
தேவ கிருபையே.. – ஹோ
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே..
நமக்கது இலவசமானதே..
தேவ கிருபையே..
அவர்தான் கிருபை… அவரே கிருபை..
என் இயேசு எந்தன் கிருபையானாரே..
அவர்தான் கிருபை… அவரே கிருபை…
நம் இயேசு நமக்கு கிருபையானாரே..