ADONAI | DAVID SELVAM | MOHAN CHINNASAMY | SAMUEL JOSEPH – Lyrics

Loading

என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே

உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்

அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

1.வானத்தை திரையை போல
அழகாய் விரித்தவரே
வாஞ்சையாய் என்னை அணைத்து
ஆறுதல் தருபவரே-2-அடோனாய்

2.மேகத்தை இரதமாக்கி
காற்றில் செல்பவரே
உம் கையை நீர் திறக்க
நன்மைகள் வசமாகுமே-2

உம் வல்ல செயல்கள் அதிசயமே
மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே
உங்க கிருபை மட்டும் போதுமே
மகிமையாய் என்னை தாங்குமே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

3.எனக்காய் எல்லாமே
ஆயத்தம் செய்தவரே
எண்ணையால் என் தலையை
அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும்

error: Content is protected !!
ADS
ADS
ADS