Aiyaa Um Thirunaamam | ஐயா உம் திருநாமம்

ஐயா உம் திருநாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்

இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்

சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்

குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS