To Advertise Contact - christmusicindia@gmail.com

Akkini | அக்கினி

Loading

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழி நடத்தும்

முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்

எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்

ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு

அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே

இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS