Allelooyaa Allelooyaa | அல்லேலூயா அல்லேலூயா

Loading

அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

நான் உயிரோடு இருக்கு மட்டும்
என் தேவனைத் துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன் – அல்லேலூயா

நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான் – அல்லேலூயா

என் ஆத்துமா தாகம் பெருக
என் கட்டுகள் அருத்திடுமே
கர்த்தரின் கரம் என்னை காத்திடுமே
என்றென்றும் வாழ்த்திடுவேன் – அல்லேலூயா

கர்த்தர் சதாகாலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாம் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS