To Advertise Contact - christmusicindia@gmail.com

Allelooyaa Karththaraiye | அல்லேலூயா கர்த்தரையே

Loading

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் யேசுவைத் துதியுங்கள்

பல்லவி
ராஜாதி ராஜனாம் ஏசுராஜன் பூமியில் ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிட துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் ஏசுவைத் துதியுங்கள்

சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை எசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலையலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தைப் பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS