Anaathi Devan | அனாதி தேவன்

பல்லவி
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்
காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த

கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த

கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் – இந்த

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் – இந்த

ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் – இந்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS