கல்வாரி சிலுவையிலே
எனக்காக தொங்கினீரே-2
இயேசு உம் அன்பினாலே
என் பாவத்தை கழுவினீரே-2
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே-2
1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்
தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன்-2
இயேசு உம் அன்பினாலே
மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே-2
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே-2
2.வாழ்க்கையில் தடுமாறினேன்
திக்கற்றவனானேன்-2
இயேசு உம் அன்பினாலே
என் தோழனாய் வந்தவரே-2
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே-2