Anbe Anbe Anbe | அன்பே அன்பே அன்பே

Loading

அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்

ஒருநாள் உம் தயவை கண்டேனையா
அன்னாலேன்னை வெறுத்தேனைய்யா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா

பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ? – அன்பின்
ஆழம் அறிவேனோ?

அலைந்தேன் பல நாள் உமையு மறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா

இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ?

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS