To Advertise Contact - christmusicindia@gmail.com

Anbin Deivam Iyaesu | அன்பின் தெய்வம் இயேசு

Loading

அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2

பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்

இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்

கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS