Anbin Devan Yesu | அன்பின் தேவன் ஏசு

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க ஏசு துடிக்கிறார்

மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்

வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் ஏசு பார்

வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற ஏசு பார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS