Antha Naal Nerungiduthae | அந்த நாள் நெருங்கிடுதே

அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்

தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
பக்தர்கள் யாவரும் விழித்திருப்போம்

திருடனைப்போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே – தேவன்

இருள் சூளும் வேளை நெருங்கிடுதே
இனி வருங்காலமோ நமக்கு இல்லை
பூரணமாக கடந்திடுவோம் நாம்
பரமனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் – தேவன்

மணவாளன் தட்டும் குரல் கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் – தேவன்

நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவார்
நீதியின் இராஜனை முகமுகமாய்
நாம் நித்தியமாக தரிசிப்போம் – தேவன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS