To Advertise Contact - christmusicindia@gmail.com

Anthagaara Vallamaigalai | அந்தகார வல்லமைகளை

Loading

அந்தகார வல்லமைகளை
தேவ பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாவல்
பயமில்லை வெற்றி எனக்கே – என்றும்

போராயுதம் தரிப்பேன் (2)
போர் செய்வேன், ஜெயம் பெறுவேன் (2)

சேனைகளின் கர்த்தர் நாமத்தில்
பெரும் மதில்களைத் தாண்டிடுவேன் (2)
ஆகாய மண்டல லோகாதிபதிகள்
நடுங்கியே மறைந்திடுவான் – பயந்து
நடுங்கியே மறைந்திடுவான் – போராயுதம்

சர்ப்பங்களை மிதித்திடவும்
பெருந் தேள்களை நசுக்கிடவும் (2)
அதிகாரமுண்டு, வல்லமையுண்டு
தோல்வியில்லை ஜெயமெனக்கே – என்றும்
தோல்வியில்லை ஜெயமெனக்கே – போராயுதம்

வெள்ளம்போல் சாத்தான் வந்தாலும்
தூய ஆவியாலே கொடியேற்றுவேன் (2)
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே – வஞ்சக
சாத்தானை வீழ்த்திடுமே – போராயுதம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS