To Advertise Contact - christmusicindia@gmail.com

Anuppum Devaa Um | அனுப்பும் தேவா உம்

Loading

பல்லவி
அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

அனுபல்லவி
பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே – அனுப்பும்

சரணங்கள்
சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகளை கரைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய – அனுப்பும்

பெந்தே கோஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பலனைப் பெற்றிடவே – அனுப்பும்

மீட்கப்படும் நல நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட – அனுப்பும்

சாத்தானின் கொட்டைகளை தகர்த்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இன்னேரமே – அனுப்பும்

இளைத்துப்போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட – அனுப்பும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS