To Advertise Contact - christmusicindia@gmail.com

Appaa Ummai Naesikkiraen | அப்பா உம்மை நேசிக்கிறேன்

Loading

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா

பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா – ஐயா

கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே  – அப்பா

அநுதின உணவு நீர்தானையா – என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS