To Advertise Contact - christmusicindia@gmail.com

Appaalepo Saaththaane | அப்பாலேபோ சாத்தானே

Loading

அப்பாலேபோ சாத்தானே அப்பாலேபோ – போ, போ, போ
அப்பாலேபோ சாத்தானே அப்பாலேபோ
உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது
நான் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டேன்
எனக்கொன்றும் பயமில்லை உலகத்திலே

எத்தனை இடர்கள் வந்தாலும்
இயேசுவின் பலன் கொண்டு முறியடிப்பேன்
காலின் கீழாக மிதித்திடுவேன் – சாத்தானை – 2
வெற்றி சிறந்த இயேசு என்னில் உண்டு – அப்பாலேபோ

வியாதிகள் வேதனை வந்தாலும்
பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே
புயல் போல துன்பங்கள் வந்தாலும் – எனக்கு – 2
புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே – அப்பாலேபோ

தங்க இங்க வீடு இன்றி போனாலும்
பரலோகத்தில் தங்கத்தால் வீடு உண்டு மகிழ்ந்திடுவேன்
ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ – 2
என் நோக்கம் பரலோகம் பரலோகமே – அப்பாலேபோ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS