Appanu koopida than

Loading

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா

 

அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்

 

கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

 

கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

error: Content is protected !!
ADS
ADS
ADS