Arunothayam Ezhunthiduvom | அருணோதயம் எழுந்திடுவோம்

சரணங்கள்
அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவை ச்துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பர னோடுற வாடவும்

இதைப் போன்றொரு அருணோதயம்
எம்மை சந்திக்கும் மனமே
ஆ! என்னானந்தம் ஜோதி சூரியனாம்
எந்தன் நேசரெழும்பும் நாள்

நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாம் மேசு காருண்யம்
ஒவ்வொன்றாயிதை தியானம் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்

போன ராவினில் ஜீவித்தோர் பலர்
பூமி விட்டுமே போய் விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரை துதிப்போம்

நான் நிர்வாணியாய் வந்த வண்ணமே
நிர்வாநியாகப் போகின்றேன்
கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ
நாடிப் போமந்த நாட்டிற்கே

ஆ! என் நேசரின் அன்பை யெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆ! என் நேச றோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்

பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாவரின் கானகந் தனில்
எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்

கொண்டல் மோதிடும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாரெனென் துக்கம்
பாசமா யங்கு தீர்த்திடும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS