Athisayamaana Oli Maya Naadaam | அதிசயமான ஒளி மய நாடாம்

பல்லவி
அதிசயமான ஒளி மய நாடாம்
என் இயேசுவின் நாடாம்
நான் வாஞ்சிக்கும் நாடாம்

பாவம் இல்லாத நாடு – ஒரு
சாபம் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான

சந்திர சூரியன் இல்லை – ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான

வித வித கொள்கை இல்லை – பல
பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் – அதிசயமான

பிரச்சனை ஏதும் இல்லை – வீண்
குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்றுஉடையோர்
எவருமே எங்கு இல்லை அன்பே மொழி – அதிசயமான

இயேசுவின் இரத்தத்தால் – பாவம்
கழுவினால் செல்லலாமே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதிசயமான