Athisayamaanavar Aalosanai | அதிசயமானவர் ஆலோசனை

பல்லவி
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய தேவனே என் இயேசுவே

சோதனை புரண்டு என்மேல் உருண்டாலும்
சோர்ந்திடாதென்னை அணைத்திட்டாரே
ஜெய கீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தானும் சீறினான்
யூதாவின் சிங்கம் பெலனீந்தாரே
ஆனந்த கீதம் பாடிடச் செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

துன்பம் தொல்லையும் கவலையும் வியாதியும்
தொடர்ந்து வந்தாலும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம்
நீரே என் நம்பிக்கை என் கோட்டையும்
உம்மை நம்பினோர் வெட்கப்படாததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS